உலகம்
இஸ்ரேல் – பாலஸ்தீன மோதலால் ஏற்பட்டுள்ள தீவிரவாத அச்சுறுத்தல்
பிரான்ஸ் புது வருட கொண்டாட்டத்தில் பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என அந்நாட்டின் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் – பாலஸ்தீன மோதலால் தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்திருப்பதே இந்த தீர்மானத்திற்கு காரணமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வருடம் தலைநகரான பாரிசில் நடக்கவிருக்கும் கொண்டாட்டத்துக்கு மட்டுமே 1 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் எதிர்பார்க்கப்படுகின்றனர்.
எனவே, பிரான்ஸ் முழுவதும் 90,000 பொலிஸ் அதிகாரிகளும் 5,000 பயங்கரவாத தடுப்பு பிரிவு இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமைக்கு பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
மேலும், பிரான்சின் சில இடங்களில் மதுபானங்களுக்கு தடை விதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுவதோடு அன்றைய தினத்தில் அரசியல் போராட்டங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.