உலகம்
வடக்கு காசாவுக்கு திடீர் பயணம் மேற்கொண்ட இஸ்ரேல் பிரதமர்
வடக்கு காசாவில் தீவிரமான தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அப்பகுதிக்கு திடீர் பயணமொன்றை மேற்கொண்டுள்ளார்.
இராணுவ தலைமை தளபதிகளுடன் சென்றிருந்த அவர் இராணுவ வீரர்களை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.
இதன் போது ஹமாஸ் படையினரை எதிர்த்து போரிட்டு வரும் இஸ்ரேல் இராணுவ வீரர்கள் மற்றும் தளதிகளுடன் பேசிய அவர், இறுதி வரை துணிவுடன் நின்று போராடுமாறும், அதற்கு தமது அரசு உறுதுணையாக இருக்கும் என்றும் உறுதியளித்துள்ளார்.
மேலும், ” நான் கேட்டுக் கொள்வது எல்லாம் இதேபோல இறுதி வரை நீங்கள் போராட வேண்டும். உங்களைப் பற்றி நாங்கள் உண்மையிலேயே பெருமைப்படுகிறோம்.
எங்கள் இதயங்கள் உங்களுக்காகத்தான் துடிக்கின்றன. நீங்கள் குடும்பங்களை எல்லாம் விட்டு வந்து போர் செய்கின்றீர்கள். சிலர் உயிரையும் கொடுத்துள்ளீர்கள். நீங்கள்தான் உண்மையான தியாகிகள் ”என அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இஸ்ரேல் இராணுவத்தில் வான்வழி தாக்குதல்களால் கடந்த 24 மணி நேரத்தில் 250 பேர் உட்பட இதுவரை 20,700 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் இயக்கத்தினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.