உலகம்

இன்குபேட்டரில் குழந்தை இயேசு சிலை, பெத்லஹேமில் கவனத்தை ஈர்த்த பெண்

Published

on

இன்குபேட்டரில் குழந்தை இயேசு சிலை, பெத்லஹேமில் கவனத்தை ஈர்த்த பெண்

குழந்தைகள் கொல்லப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிறிஸ்துமஸ் நாளில் பெத்லஹேமில் குழந்தை இயேசு சிலையை இன்குபேட்டரில் வைத்து வழிபட்டனர்.

இயேசு கிறிஸ்து பிறந்ததாக கிறிஸ்துவர்களால் நம்பப்படும் பெத்லஹேம் நகரம் ஜெருசலேமின் தெற்கில் அமைந்துள்ளது. இங்கு உள்ள ‘Church of the Nativity’ தேவாலயத்தை காண உலகம் முழுவதும் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள், சுற்றுலாப் பயணிகள் வருவர்.

முக்கியமாக, கிறிஸ்துமஸ் நாளில் பெத்லஹேம் நகரமே விழாக்கோலம் போல காட்சியளிக்கும். இந்நிலையில், கடந்த ஒக்டோபர் 7-ம் திகதி முதல் இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் ஆயுதக் குழு இடையே போர் நடைபெற்று வருவதால், இங்கு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை மக்கள் தவிர்த்துள்ளனர்.

இந்நிலையில் பெத்லஹேமில் உள்ள பிஷாரா என்ற பெண், போரினால் குழந்தைகள் கொல்லப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிறிஸ்துமஸ் நாளில் தேவாலயத்தின் முன்பு இன்குபேட்டரில் குழந்தை இயேசு சிலையை வைத்து கவனத்தை ஈர்த்தார்.

மேலும் அவர் கூறுகையில், “போரினால் காசாவில் உள்ள அல் ஷிபா மருத்துவமனையில் மருந்துகள்மற்றும் மின்சாரம் இல்லாததால் 8 குழந்தைகள் உயிரிழந்துள்ளது” என்றார்.

Exit mobile version