உலகம்

பாகிஸ்தான் தேர்தலில் போட்டியிடவுள்ள முதல் இந்துப்பெண்

Published

on

பாகிஸ்தான் தேர்தலில் போட்டியிடவுள்ள முதல் இந்துப்பெண்

அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் இந்து சமயத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் போட்டியிடவுள்ளார்.

குறித்த தேர்தலானது 2024ஆம் ஆண்டு பெப்ரவரி 8ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் சவீரா பர்காஷ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

இதனூடாக பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் போட்டியிடும் முதல் இந்துப் பெண் என்ற பெருமையை சவீரா பர்காஷ் பெற்றுள்ளார்.

பல்வேறு அரசியல் பிரச்சினைகளுக்கு இடையே நாடு தற்போது சிக்குண்டு இருக்கின்றது

இந்நிலையில், இன்னும் ஒரு மாதத்தில் அந்நாடு பொதுத் தேர்தல் ஒன்றை சந்திக்கவிருக்கின்றது.

மருத்துவராக இருந்து அண்மையில் ஓய்வுபெற்ற சவீரா பர்காஷ்ஷின் தந்தை ஓம் பர்காஷ், பாகிஸ்தான் மக்கள் கட்சியில் 35 ஆண்டு காலமாக உறுப்பினராக இருந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து தந்தையின் அடியை பின்பற்றி மகளும் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.

இதேவேளை 2022ஆம் ஆண்டு மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்றிருக்கும் சவீரா, பனெரிலிருந்து பொதுத் தொகுதியில் போட்டியிடும் முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Exit mobile version