உலகம்

மாயாவிடம் செல்லம் கொஞ்சிய பூர்ணிமாவின் அம்மா!

Published

on

மாயாவிடம் செல்லம் கொஞ்சிய பூர்ணிமாவின் அம்மா!

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது ஆரம்பித்து தற்பொழுது 79 நாட்களைக் கடந்து, வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகின்றது.

கடந்த வாரம் அனன்யா மற்றும் கூல் சுரேஷ் ஆகியோர் எலிமினேட் ஆகி வெளியேறியிருந்தனர்.

பிக் பாஸ் சீசன் 7 இல் இந்த வாரம் பிரீஸ் டாஸ்க் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பிக் பாஸ் இல்லம் கண்ணீர் மழையில் நனைய தயாராகிவிட்டது எனலாம்.

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டிற்குள் முதலாவதாக பூர்ணிமாவின் அம்மா அனுப்பப்படுகிறார். போட்டியாளர்கள் அனைவரும் பிரீஸ் ஆகி நிற்க, பூர்ணிமா ஓடிச்சென்று அம்மாவை அனைத்துக் கொள்கிறார். இதன் போது அவரது அம்மா சந்தோஷத்தில் அழுகிறார்.

இதை தொடர்ந்து நேரே மாயாவிடம் சென்ற பூர்ணிமாவின் அம்மா, மாயாவையும் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து, என் செல்லக் குட்டி என கொஞ்சுகிறார்.

அதன்படி, பிக் பாஸ் வீட்டிலுள்ள அனைத்து போட்டியாளர்களையும் கட்டித் தழுவி பேசியுள்ளார் பூர்ணிமாவின் அம்மா. குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.

Exit mobile version