உலகம்

100 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்! ரஷ்யாவை எதிர்த்த உக்ரைன்

Published

on

100 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்! ரஷ்யாவை எதிர்த்த உக்ரைன்

உக்ரேனிய கிறிஸ்தவர்கள் 100 ஆண்டுகளுக்கு பின்னர் டிசம்பர் 25ம் நாளான இன்று முதல் முறையாக கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடியுள்ளனர்.

கடந்த 2022 பிப்ரவரி மாதத்தில் இருந்து ரஷ்யா தனது அண்டைய நாடான உக்ரைனை தாக்கி வருகிறது. இதற்கு அடிபணியாத உக்ரைன் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் ரஷியாவை எதிர்த்து போரிட்டு வருகிறது.

இந்த தாக்குதலின் காரணமாக பல உயிரிழப்புகளும் கட்டிட சேதங்களும் ஏற்பட்டுள்ளன. 665 நாட்களை கடந்து போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ரஷ்யா, ரோமானிய கால ஜூலியன் கேலண்டரின்படி ஜனவரி 7 அன்றுதான் கிறிஸ்துமஸ் கொண்டாடி வந்தது, இதன்படியே உக்ரைனும் கொண்டாடியது.

ஆனால் கடந்தாண்டு யூலை மாதம் ரஷ்யாவை எதிர்க்கும் விதமாக  இனி பின்பற்ற மாட்டோம் என, உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி சட்டத்தை மாற்றினார்.

ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக கடைபிடிக்கப்பட்டு வந்த வழக்கத்தை மாற்றி, முதன் முறையாக டிசம்பர் 25 ஆம் திகதி கொண்டாடியுள்ளனர்.

மேலும் போரினால் அதிகம் சேதமடையாத மேற்கு நகரமான லிவிவ் நகரில், பாரம்பரிய உடையில் குழந்தைகள் கரோல் பாடல்களைப் பாடி தெருக்களில் திருவிழா ஊர்வலங்களில் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version