உலகம்

நாளை 19ம் ஆண்டு சுனாமி நினைவு நாள் – உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி

Published

on

நாளை 19ம் ஆண்டு சுனாமி நினைவு நாள் – உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி

2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் திகதி, கடலுக்கடியில் ரிக்டர் அளவில் 9 முதல் 9.3 ஆக பதிவான நிலநடுக்கம் சுனாமியை உருவாக்கியது, இந்தோனேசியா, இலங்கை, இந்தியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் கோரத்தாண்டவம் ஆடிச்சென்றது.

அதில் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களில் பலரது உயிரும் பறிபோனது. காணாமல் போனவர்களின் எண்ணிக்கை சரி வர தெரியாததால், உண்மையில் அந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

நாளை 19ம் ஆண்டு சுனாமி நினைவு நாள் – உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி | 19Th Annual Tsunami Commemoration

தமிழகத்தில் சுனாமி தாக்குதலில் சென்னை முதல் குமரி வரை கிழக்கு கடலோர பகுதிகள் பாதிக்கப்பட்டன. 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறந்தனர்.

அதிகபட்சமாக நாகப்பட்டினத்தில் 6 ஆயிரத்து 65 பேரும், கடலூரில் 610 பேரும், சென்னையில் 206 பேரும் பலியானார்கள். உயிர்ப்பலியை தாண்டி, பொருட்களின் சேத மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய்.

இதனால், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26-ந்தேதி சுனாமி நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

இந்நிலையில் நாளை 19-வது ஆண்டு சுனாமி நினைவு தினம்  அனுஷ்டிக்கப்படவுள்ளது. சுனாமி கோர தாண்டவம் ஆடிய தினம் நிகழ்ந்து 19 ஆண்டுகள் முடிந்தாலும் உறவினர்களை பறிகொடுத்தவர்களின் துயரம் இன்னும் நீங்காமல் நீடித்துக்கொண்டே இருகிறது எனலாம்.

ஆகவே சென்னை உள்பட தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் நினைவு நாள் கடைப்பிடிக்கவுள்ளது.

இந்நிகழ்வில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொள்ளவுள்ளனர். மேலும் கடலில் பால் ஊற்றியும், மலர் தூவியும் மரியாதை செலுத்தப்படவிருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version