உலகம்

இந்தியப் பெருங்கடலில் சிக்கித் தவிக்கும் 185 புலம்பெயர் மக்கள்., மீட்க வலியுறுத்தும் ஐ.நா.

Published

on

இந்தியப் பெருங்கடலில் சிக்கித் தவிக்கும் 185 புலம்பெயர் மக்கள்., மீட்க வலியுறுத்தும் ஐ.நா.

இந்திய பெருங்கடலில் அந்தமான் நிக்கோபார் தீவுகள் அருகே படகில் கவிழ்ந்த 185 ரோஹிங்கியா புலம்பெயர் மக்களை அவசரமாக மீட்க வேண்டும் என ஐ.நா. அழைப்பு விடுத்துள்ளது.

படகில் இருந்தவர்களில் 70 பேர் குழந்தைகள் மற்றும் 88 பேர் பெண்கள் என்று UNHCR அகதிகள் நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதில் பத்துக்கும் மேற்பட்டோர் ஆபத்தான நிலையில் இருப்பதாக அஞ்சப்படுகிறது, மேலும் ஒருவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது என்று ஐ.நா. கூறியுள்ளது.

உரிய நேரத்தில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்படாவிட்டால் மேலும் பலர் உயிரிழக்க நேரிடும் என அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

ரோஹிங்கியா மக்களை மீட்பதற்காக சுற்றியுள்ள அனைத்து கடலோர அதிகாரிகளையும் தொடர்பு கொள்வதாகவும், “இது மிகவும் அவநம்பிக்கையான சூழ்நிலை” என்றும் UNHCR செய்தித் தொடர்பாளர் Babar Baloch கூறினார்.

மியான்மரில் துன்புறுத்தப்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம்கள் ஆபத்தான கடல் பயணங்கள் மூலம் மலேசியா அல்லது இந்தோனேசியாவை அடைய முயற்சிக்கின்றனர். UNHCR படி, 2022-ல் 2,000 க்கும் மேற்பட்ட ரோஹிங்கியாக்கள் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ஆபத்தான பயணத்தை மேற்கொண்டனர்.

கடந்த ஆண்டு முதல், இப்பகுதியில் ரோஹிங்கியா அகதிகள் உட்பட 570க்கும் மேற்பட்டோர் கடலில் இறந்துள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர் என தரவுகள் கூறுகின்றன.

Exit mobile version