உலகம்

கொலைக்களமான பல்கலைக்கழகம்… துப்பாக்கிதாரியின் பதறவைக்கும் பின்னணி

Published

on

கொலைக்களமான பல்கலைக்கழகம்… துப்பாக்கிதாரியின் பதறவைக்கும் பின்னணி

செக் குடியரின் ப்ராக் நகரில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் துப்பாக்கியால் 14 பேர்களை கொன்றதுடன், தாமும் தற்கொலை செய்துகொண்டுள்ள விவகாரத்தில் அதிர்ச்சி பின்னணி வெளியாகியுள்ளது.

குறித்த கோர சம்பவத்தில் 25 பேர்கள் காயங்களுடன் தப்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பல்கலைக்கழகத்தில் தாக்குதல் நடத்திய அந்த நபரே கடந்த வாரம் வனப்பகுதியில் ஒரு ஆண் மற்றும் குழந்தையின் மரணத்திற்கும் காரணம் என்று நம்பப்படுகிறது.

ப்ராக் நகரில் அமைந்துள்ள சார்லஸ் பல்கலைக்கழகத்தின் தத்துவ பீடம் மீதே வியாழக்கிழமை உள்ளூர் நேரப்படி மதியத்திற்கு மேல் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதில் அந்த தாக்குதல்தாரியும் தற்கொலை செய்துகொண்டதாக செக் குடியரசு உள்விவகார அமைச்சர் உறுதி செய்துள்ளார். மேலும், அந்த தாக்குதல்தாரி சார்லஸ் பல்கலைக்கழகத்தில் தத்துவம் பயின்று வந்த மாணவன் David Kozak என்றே அடையாளம் காணப்பட்டுள்ளது.

அத்துடன் குடியிருப்பில் அவரது தந்தையின் சடலம் மீட்கப்பட்டதை அடுத்து, அந்த மரணத்திற்கு காரணம் அவரா என்பது குறித்தும் பொலிசார் விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.

மட்டுமின்றி, தமது டெலிகிராம் செயலியில், உலகத்தை தாம் வெறுப்பதாகவும் முடிந்த அளவுக்கு வலிகளை விட்டுச்செல்ல தாம் முடிவெடுத்துள்ளதாகவும் David Kozak பதிவு செய்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பல்கலைக்கழக தாக்குதல் சம்பவத்தில், தொடக்கத்தில் 10 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கையில், 14க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியிருக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Exit mobile version