உலகம்

10,000 டொலர்கள் வெகுமதியை அறிவித்த FBI: யார் இந்த மாணவி?

Published

on

10,000 டொலர்கள் வெகுமதியை அறிவித்த FBI: யார் இந்த மாணவி?

நியூ செர்ஜி பகுதியில் காணாமல் போன இந்திய பெண் மாணவி மயூஷி பகத்(Mayushi Bhagat) குறித்து தகவல் வழங்குபவர்களுக்கு 10,000 அமெரிக்க டொலர்கள் வெகுமதியாக வழங்கப்படும் என FBI தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் நியூ செர்ஜி பகுதியில் 29 வயது இந்திய பெண் மாணவி மயூஷி பகத் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன நிலையில், அவர் குறித்த தகவல் வழங்குபவர்களுக்கு சுமார் $ 10,000 அமெரிக்க டொலர்கள் வெகுமதியாக வழங்கப்படும் என FBI தற்போது தெரிவித்துள்ளது.

இந்திய பெண் மாணவி மயூஷி பகத் 2019ம் ஆண்டு ஏப்ரல் 29ம் திகதி அமெரிக்காவின் நியூ செர்ஜி நகரத்தில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் இறுதியாக பார்க்கப்பட்டுள்ளார்.

2019ம் ஆண்டு மே 1ம் திகதி இந்திய பெண் மாணவி மயூஷி பகத்தை காணவில்லை என அவரது பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

1994ம் ஆண்டு இந்தியாவில் பிறந்த மயூஷி பகத், கடந்த 2016ம் ஆண்டு F1 ரக மாணவர் விசாவில் அமெரிக்காவிற்கு வந்துள்ளார்.

நியூயார்க் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி-யில் கல்வி பயின்று வந்த மயூஷி பகத்திற்கு ஆங்கிலம், ஹிந்தி, உருது, ஆகிய மொழிகள் தெரியும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருமையான முடி, காபி நிற கண்கள், கொண்ட மயூஷி பகத் 5 அடி 10 அங்குலம் உயரம் கொண்டவர் எனவும், அவர் காணாமல் போன போது கருப்பு நிற டி-ஷர்ட்டும், பல வண்ணங்கள் கொண்ட பைஜாமா பேன்ட் அணிந்து இருந்தார் என பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்திய பெண் மாணவி மயூஷி பகத் காணாமல் போய் 4 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் அவர் குறித்த ஒரு தகவலும் தெரிய வராத நிலையில், பொதுமக்களின் உதவியை FBI மற்றும் ஜெர்சி நகர பொலிஸார் நாடியுள்ளனர்.

மயூஷி பகத் இருப்பிடம் குறித்தோ அல்லது அவரை மீட்டோ தருபவர்களுக்கு சுமார் $ 10,000 அமெரிக்க டொலர்கள் வெகுமதியாக வழங்கப்படும் என FBI தெரிவித்துள்ளது.

Exit mobile version