உலகம்

காசாவை தரைமட்டமாக்குவது முறையல்ல: இஸ்ரேல் செயலுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் கண்டனம்

Published

on

காசாவை தரைமட்டமாக்குவது முறையல்ல: இஸ்ரேல் செயலுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் கண்டனம்

பயங்கரவாதத்திற்கு எதிரான சண்டை என்பதன் பொருள் காசா நகரை தரைமட்டமாக்குவது என்பது இல்லை என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 7ம் திகதி இஸ்ரேலின் எல்லை நகரங்கள் மீது ஹமாஸ் படையினர் நடத்திய திடீர் தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படையினருக்கு இடையிலான சண்டை முழு நீள போராக உருவெடுத்துள்ளது.

இதில் இதுவரை 20,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட நிலையில், அவற்றில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலஸ்தீனத்தின் காசாவிற்குள் நுழைந்து தரைவழி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பயங்கரவாதத்திற்கு எதிரான சண்டை என்பதன் பொருள் ஒட்டுமொத்த காசா நகரையும் தரைமட்டாக்குவது என்பது இல்லை என புதன்கிழமை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரான்ஸ் 5 ஒளிப்பரப்பாளர்களுக்கு மக்ரோன் அளித்த பேட்டியில், பயங்கரவாதத்திற்கு எதிரான சண்டையில் காசா நகரை தரைமட்டமாக்குவது அல்லது பாகுபாடு இல்லாமல் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவது என்ற சிந்தனையை நாம் வேரூன்ற அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்வினையை உடனடியாக நிறுத்துமாறும், ஏனென்றால் இவை முறையானதாக இல்லை, மேலும் அனைத்து உயிர்களும் சமம் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்தது, நாங்கள் அனைவரையும் பாதுகாப்போம் என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய மக்ரோன், பொதுமக்கள் பாதுகாப்பிற்கும், மனிதாபிமான போர் நிறுத்தத்திற்கும் பிரான்ஸ் அழைப்பு விடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version