உலகம்

பிரித்தானிய அரசிற்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பு

Published

on

பிரித்தானிய அரசிற்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பு

மிதவைப்படகில் தங்கவைக்கப்பட்ட புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, படகுத் திட்டத்தை உடனடியாகக் கைவிடுமாறு பிரித்தானிய அரசை வலியுறுத்தியுள்ளன.

பிரித்தானியின் செலவீனங்களை குறைப்பதற்காக புகலிடக்கோரிக்கையாளர்களை மிதவைப்படகில் தங்கவைக்கும் திட்டத்தை அந்நாட்டு அரசு முன்மொழிந்திருந்தது.

இதன்படி பிப்பி ஸ்டாக்ஹோம்(Bibby Stockholm) என்ற பெயர் கொண்ட மிதவைப்படகில் புகலிடக்கோரிக்கையாளர்கள் சிலர் தங்கவைக்கப்பட்டார்கள்.

இதன் பின்னர் படகில் பயன்படுத்தப்படும் தண்ணீரில் லீஜியோனெல்லா என்னும் நோய்க்கிருமிகள் இருப்பது தெரியவந்ததால், படகிலிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டு, இரண்டு மாதங்களுக்குப் பின் அக்டோபரில் மீண்டும் படகுகளில் ஏற்றப்பட்டார்கள்.

இந்நிலையில், அந்த மிதவைப்படகில் தங்கவைக்கப்பட்டிருந்த புகலிடக்கோரிக்கையாளர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

டோர்சேட் என்னுமிடத்திலுள்ள போர்ட்லேன்ட் துறைமுகத்தில் படகு நிறுத்தப்பட்டுள்ளது.

அந்த படகில் தங்கியிருந்த புகலிடக்கோரிக்கையாளர்களில் ஒருவர் செவ்வாயன்று தவறான முடிவை மேற்கொண்தாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து, 65 தொண்டுநிறுவனங்களும் தொழிலாளர் கட்சியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும், உடனடியாக அந்த திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரக்கோரி அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Exit mobile version