உலகம்

முட்டைக்காக முதியவரிடம் மன்னிப்பு கேட்ட ரஷ்ய ஜனாதிபதி புடின்

Published

on

முட்டைக்காக முதியவரிடம் மன்னிப்பு கேட்ட ரஷ்ய ஜனாதிபதி புடின்

முட்டை விலை கடுமையாக உயர்ந்ததற்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் பொதுமக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதி புடின் வழக்கமாக வருடத்தின் இறுதியில் ஊடகங்கள் மற்றும் பொதுமக்களிடம் உரையாடி அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது ரஷ்யாவில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், பென்ஷன் வாங்கும் முதியவர் ஒருவர் முட்டை விலை மற்றும் கோழி இறைச்சியின் விலை கடுமையாக உயர்ந்து இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி புடினிடம் தனது வேதனையை முன் வைத்தார்.

இதற்கு உடனடியாக பதிலளித்த ரஷ்ய ஜனாதிபதி பென்ஷன் வாங்கும் முதியவரிடம் இதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

அத்துடன் இது அரசாங்க செயல்பாட்டின் தோல்வி, வரும் காலத்தில் இந்த பிரச்சனைகள் சரி செய்யப்படும் என நான் உறுதியளிக்கிறேன் என்று பதிலளித்துள்ளார்.

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் காரணமாக ரஷ்யாவில் முட்டையின் விலை 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

மேலும் மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடை காரணமாக முட்டை உற்பத்தியாளர்கள் கோழி தீவனம் ஆகியவற்றை இறக்குமதி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதுவே ரஷ்யாவில் முட்டை மற்றும் கோழி இறைச்சிக்களுக்கான விலை உயர்வுக்கு காரணம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version