உலகம்

இஸ்ரேல் உளவுத்துறையுடன் தொடர்புடையவருக்கு மரண தண்டனை

Published

on

இஸ்ரேல் உளவுத்துறையுடன் தொடர்புடையவருக்கு மரண தண்டனை

இஸ்ரேலின் மொசாத் உளவுத்துறையுடன் தொடர்புடையவர் என அடையாளம் காணப்பட்ட ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாக ஈரான் தகவல் வெளியிட்டுள்ளது.

ஈரானின் தென்கிழக்கு, சிஸ்தான் – பாலுசெஸ்தான் மாகாணத்திலுள்ள சாஹேதான் சிறையில் நேற்று(16) மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த நபர் வெளிநாட்டு உளவு அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தார் என்றும், குறிப்பாக இஸ்ரேலின் மொசாத் உளவுத்துறையுடன் அவருக்கு தொடர்புள்ளது என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக முக்கியமான தரவுகளை திரட்டி மொசாத் உள்ளிட்ட வெளிநாட்டு உளவு அமைப்புகளுக்கு அவர் கைமாற்றியுள்ளார் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அடையாளம் காணப்பட்ட அந்த நபர், ஈரானுக்கு எதிரான குழுக்கள் மற்றும் அமைப்புகளுக்கு பிரச்சாரம் செய்யும் நோக்கில் ஒரு மொசாத் அதிகாரியிடம் இரகசிய தகவல்களை கையளித்தார் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் அந்த நபர் எப்போது கைதானார் அல்லது அவரது பெயர் உள்ளிட்ட தகவல்கள் எதையும் ஈரான் அதிகாரிகள் வெளியிட மறுத்துள்ளனர்.

Exit mobile version