உலகம்
கனடாவில் நாடுகடத்தப்படும் நெருக்கடியில் இருந்த இளைஞர்… கடைசி நொடியில் ஏற்பட்ட திருப்புமுனை
உகாண்டாவுக்கு நாடுகடத்தப்படும் நெருக்கடியை எதிர்கொண்டுவந்த தன்பாலின ஈர்ப்பாளர் இளைஞர் ஒருவர் கடைசி நொடியில் வெளியான தகவலால் நிம்மதியடைந்துள்ளார்.
அத்துடன் ஏழு மாத தற்காலிக குடியுரிமை அனுமதி மற்றும் பணி செய்ய அனுமதியும் அளிக்கப்பட்டுள்ளதாக தொடர்புடைய இளைஞரின் சட்டத்தரணியான Michael Battista உறுதி செய்துள்ளார்.
ஆனால் அந்த இளைஞரின் போராட்டமானது ஓயவில்லை என்றும், அவருக்கு நிரந்தரவதிவிட அனுமதி அளிக்கப்படவில்லை என்றும், அடுத்த ஆண்டு அவர் தகுதிபெறும் போது மேலும் விண்ணப்பங்களை தாக்கல் செய்ய அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் Michael Battista குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் அந்த இளைஞர் தெரிவிக்கையில், தற்போது தாம் நிம்மதியாக உணர்வதாகவும், தமது கோரிக்கை கேட்கபட்டதாக உணர்வதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தாம் ஒரு சர்வதேச மாணவராக கனடாவுக்கு வந்ததாகவும் 2018 முதல் எட்மண்டனில் வசித்து வருவதுடன் செவிலியராகவும் பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் அவரது வேலைக்கான விசா காலாவதியாகவும், அகதி அந்தஸ்து கோரி மனு அளித்துள்ளார். ஆனால் அந்த மனுவும், அதன் பின்னர் முன்னெடுக்கப்பட்ட மேல்முறையீடு மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, 2023 மே மாதம் உகாண்டா அராசங்கமானது தன்பாலின ஈர்ப்பாளர்களை குற்றவாளிகள் என்ற சட்ட திருத்தம் கொண்டுவந்தது. உகாண்டா சட்டத்தின் கீழ், தீவிரமான தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.
இந்த நிலையில், உகாண்டாவில் உள்ள மொத்த குடும்பத்தினரும் தம்மை கைவிட்டுள்ள நிலையில், கனடாவும் கைவிட்டால் தாம் எங்கே செல்வது என்ற குழப்பத்திலேயே இருந்து வந்ததாக அந்த இளைஞர் தெரிவித்துள்ளார்.
ஹூதிகளின் அட்டூழியம்… சுவிட்சர்லாந்தை சேர்ந்த மிகப்பெரிய சரக்கு கப்பல் நிறுவனம் எடுத்த முடிவு
ஹூதிகளின் அட்டூழியம்… சுவிட்சர்லாந்தை சேர்ந்த மிகப்பெரிய சரக்கு கப்பல் நிறுவனம் எடுத்த முடிவு
கனடாவில் இருந்து நாடுகடத்தப்பட்டால், உகாண்டா அதிகாரிகளிடம் சிக்கி, சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு சிறைக்கு அனுப்பப்படலாம் என்றே அச்சத்தில் வாழ்ந்து வந்ததாக அவர் தெரிவித்துள்ளார். தற்போது அந்த நெருக்கடியில் இருந்து தற்காலிக விமோசனம் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.