உலகம்

காஸாவில் சிக்கித் தவிக்கும் உறவினர்கள்… வழக்கு தொடர்ந்த அமெரிக்க மக்கள்

Published

on

காஸாவில் சிக்கித் தவிக்கும் உறவினர்கள்… வழக்கு தொடர்ந்த அமெரிக்க மக்கள்

காஸாவில் சிக்கியுள்ள தங்கள் உறவினர்களை வெளியேற்ற ஜோ பைடன் நிர்வாகம் உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை எனக் கூறி இரண்டு பாலஸ்தீனிய அமெரிக்க குடும்பங்கள் வழக்குத் தொடுத்துள்ளன.

தங்கள் நாட்டு மக்களை
காஸாவில் சிக்கியிருந்த இஸ்ரேல்– அமெரிக்க மக்களை வெளியேற்ற ஜோ பைடன் நிர்வாகம் முன்னெடுத்த நடவடிக்கைகளை ஒப்பிட்டும் அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் படைகள் முன்னெடுத்த தாக்குதலை அடுத்து, அமெரிக்க நிர்வாகம் தனியார் விமானங்களை பயன்படுத்தி தங்கள் நாட்டு மக்களை வெளியேற்றியது.

அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கையில், தங்களின் துரித நடவடிக்கையால் 1,300 அமெரிக்க – பாலஸ்தீன மக்கள் காஸாவில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

ஆனால் காஸாவில் சிக்கியுள்ள 900 அமெரிக்க மக்களை மீட்க ஜோ பைடன் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லை என்றே புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு உரிமைகளுக்கு எதிரான செயல் என்றும் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்க நிர்வாகம் முயன்றால் தொடர் நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கலாம். ஆனால் பாலஸ்தீன மக்களுக்காக அவர்கள் திட்டமிட்டே எதையும் முன்னெடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இதுவரை 19,000 பாலஸ்தீன மக்கள்
இந்த குற்றச்சாட்டுகளுக்கு வெளிவிவகாரத்துறை கருத்து தெரிவிக்க மறுத்துள்ளதுடன், காஸாவில் சிக்கியுள்ள மக்களை மீட்க அதிகாரிகள் தொடர்ந்து முயன்று வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.

அக்டோபர் தாக்குதலுக்கு பின்னர், போர் பிரகடனம் செய்த இஸ்ரேல், இதுவரை 19,000 பாலஸ்தீன மக்களை கொன்றுள்ளது. மொத்தமுள்ள 2.3 மில்லியன் மக்களில் சுமார் 85 சதவீதம் பேர்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டு, இடம்பெயர்ந்துள்ளனர்.

புதன்கிழமை பதிவு செய்யப்பட்டுள்ள அந்த புகார் மனுவில் கடுமையான ஒரு போர் சூழலில் அமெரிக்க குடிமக்களைப் பாதுகாக்கத் தவறிய பெடரல் அரசு, பாலஸ்தீன அமெரிக்கர்களுக்கு சமமான பாதுகாப்பையும் மறுத்துள்ளது என குறிப்பிட்டுள்ளது.

Exit mobile version