உலகம்

இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர் பட்டத்தை இழக்கும் முகேஷ் அம்பானி: முந்தும் இன்னொரு பிரபலம்

Published

on

இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர் பட்டத்தை இழக்கும் முகேஷ் அம்பானி: முந்தும் இன்னொரு பிரபலம்

இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்த கௌதம் அதானி, இந்த ஆண்டு கடும் பின்னடைவை சந்தித்திருந்தார்.

வெறும் இரண்டே வாரத்தில்
கௌதம் அதானியின் பல நிறுவனங்கள் பெரும் இழப்பை எதிர்கொண்டது. ஆனால் வெறும் இரண்டே வாரத்தில் கௌதம் அதானி 18.8 பில்லியன் அமெரிக்க டொலர் தொகையை சம்பாதித்துள்ளார்.

மேலும், முகேஷ் அம்பானியை விடவும் 23 பில்லியன் டொலர் வித்தியாசம் தான். முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு தற்போது 95.9 பில்லியன் டொலர் என்றே தெரிய வந்துள்ளது.

Hindenburg வெளியிட்ட குற்றச்சாட்டுகளால் அதானியின் சொத்து மதிப்பு கடும் சரிவை சந்தித்தது. அதானியின் 9 நிறுவனங்கள் இழப்பை எதிர்கொண்டது.

ஆசியாவின் இரண்டாவது
தற்போது அந்த சிக்கல்களில் பெரும்பாலானவை முடித்துவைக்கப்பட்டு, அதானி குழுமம் மெல்ல மீண்டு வருவதுடன், முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்புக்கு மிக அருகாமையில் எட்டியுள்ளது.

அதானி குழும பங்குகளின் மீது வர்த்தக சமூகம் நம்பிக்கை கொண்டதுடன் அதன் மதிப்பு அதிகரித்துள்ளது. இது Bloomberg பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அதானியை இடம்பெற செய்துள்ளது.

கௌதம் அதானி தற்போது ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய கோடீஸ்வரராகவும் உலகளவில் பதினைந்தாவது இடத்திலும் உள்ளார். கௌதம் அதானியின் தற்போதைய சொத்து மதிப்பு 72.8 பில்லியன் அமெரிக்க டொலர் என்றே கூறப்படுகிறது.

முகேஷ் அம்பானியை விடவும் தற்போது 23 பில்லியன் டொலர் பின் தங்கி இருந்தாலும், கெளதம் அதானி முன்னர் முகேஷ் அம்பானியின் இடத்தை தக்கவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version