உலகம்

கடவுளின் கோபத்துக்கு இஸ்ரேல் உள்ளாகும்: ஆக்ரோஷமான உரைக்கு மத்தியில் மயங்கி விழுந்த துருக்கி எம்.பி

Published

on

கடவுளின் கோபத்துக்கு இஸ்ரேல் உள்ளாகும்: ஆக்ரோஷமான உரைக்கு மத்தியில் மயங்கி விழுந்த துருக்கி எம்.பி

இஸ்ரேஸ் கடவுளின் கோபத்துக்கு உள்ளாகும் என துருக்கி நாட்டு எம்.பி நாடாளுமன்றத்தில் காட்டமாக பேசிவிட்டு மயங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினர் இடையே போர் தாக்குதலானது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரில் துருக்கியின் செயல்பாடு குறித்து துருக்கி நாட்டின் நாடாளுமன்றத்தில் எம்.பி ஹசன் பித்மெஜ்(53) காட்டமாக பேசி கொண்டு இருந்தார்.

அப்போது வரலாறு அமைதியாக இருந்தாலும், உண்மை எப்போதும் அமைதியாக இருக்காது என அவர் துருக்கி அரசை விமர்சிக்கும் வகையில் பேசினார்.

அத்துடன் இஸ்ரேலை குறிப்பிட்டு பேசிய அவர், எங்களை அகற்றி விட்டால் பிரச்சனை இருக்காது என அவர்கள் நினைக்கிறார்கள், ஆனால் தவறுகளின் துன்பத்தில் இருந்து தப்பிக்க முடியாது.

வரலாற்றில் இருந்து நீங்கள் தப்பி விட்டாலும், கடவுளின் கோபத்தில் இருந்து நீங்கள் தப்பிக்க முடியாது என கோபத்துடன் பேசினார்.

மிகவும் ஆக்ரோஷமாக உரையாற்றி கொண்டு இருந்த எம்.பி ஹசன் பித்மெஜ்(53) உரையின் நடுவிலேயே நாடாளுமன்றத்தில் மயங்கி விழுந்துள்ளார்.

இதனால் நாடாளுமன்றத்தில் பரபரப்பு உருவானது, இந்த காட்சிகள் நேரலையில் ஒளிபரப்பு ஆகி கொண்டிருந்த நிலையில், எம்.பி ஹசன் பித்மெஜ் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்கும் என கூறப்படும் நிலையில், அவர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாக துருக்கி சுகாதார அமைச்சர் பரெத்தீன் கோகா தெரிவித்துள்ளார்.

Exit mobile version