உலகம்

புகலிடக்கோரிக்கையாளர்களை நாடுகடத்தும் சட்டமூலம் சுனக்கிற்கு கிடைத்துள்ள வெற்றி

Published

on

புகலிடக்கோரிக்கையாளர்களை நாடுகடத்தும் சட்டமூலம் சுனக்கிற்கு கிடைத்துள்ள வெற்றி

புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவிற்கு நாடுகடத்த வகை செய்யும் சட்டமூலம் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் வெற்றி பெற்றுள்ளது.

பிரித்தானியாவுக்குள் நுழைந்து புகலிடம் கோருவோரின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்வரை, அவர்கள் ஏதாவது ஒரு ஆப்பிரிக்க நாட்டுக்கு அனுப்பி அங்கு தங்கவைப்பதுதான் ருவாண்டா திட்டமாகும்.

புகலிடக்கோரிக்கையாளர்களின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், அவர்கள் ருவண்டாவிலேயே வாழ அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.

சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர் வெளிநாட்டவர்கள் அச்சமடைய வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கம் என பிரித்தானியா கூறியுள்ளது.

புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு நாடுகடத்துவது தொடர்பாக சட்டம் ஒன்றைக் கொண்டுவர ரிஷி சுனக் தலைமையிலான பிரித்தானிய அரசு கடுமையாக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், ருவாண்டா திட்டம் தொடர்பான சட்டமூலம் ஒன்று பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கீழவை முன் நேற்று முன்தினம்(12) முன்வைக்கப்பட்டது.

குறித்த சட்டமூலத்தை பிரித்தானியாவின் எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி, ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் எதிர்த்து கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

எனினும், வாக்கெடுப்பில், சட்டமூலத்திற்கு ஆதரவாக 313 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்ததன் மூலம் சட்டமூலம் வெற்றி பெற்றுள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.

இது பிரதமர் ரிஷிக்கு வெற்றியாக கருதப்பட்டாலும், பிரித்தானியாவைப் பொருத்தவரை, ஒரு சட்டமூலம் சட்டமாக்கப்பட வேண்டுமானால், அது ஏழு கட்டங்களில் வெற்றிபெற வேண்டும். இந்நிலையில் முதல் கட்டத்தில் ரிஷி வெற்றிபெற்றுள்ளார் என கூறப்படுகிறது.

குறித்த சட்டமூலத்தில் சில சட்டத்திருத்தங்கள் கொண்டுவராவிட்டால், அடுத்தடுத்த கட்டங்களில் சுனக்கின் திட்டம் தோற்கடிக்கப்படும் என கூறப்படுகிறது.

Exit mobile version