உலகம்

2023 இல் சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்த்த நாடுகள்

Published

on

2023 இல் சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்த்த நாடுகள்

உலகில் எண்ணிலடங்காத சுற்றுலா தளங்கள் காணப்பட்ட போதிலும் இந்த வருடம் அதிகமான சுற்றுலாப் பயணிகள் பயணித்த நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.

இந்த வருடம் அதிக சுற்றுலாப்பயணிகள் சென்ற நாடுகளில் ஸ்பெயின், இத்தாலி, நியூயோர்க், மெக்சிக்கோ, பிரான்ஸ் ஆகிய 5 நாடுகள் இடம்பிடித்துள்ளன.

ஸ்பெயின்
ஸ்பெயினின், பார்சிலோனாவில் உள்ள Antoni Gaudi’s Sagrada Familia கத்தோலிக்க ஆயரின் இருப்பிடம் மற்றும், Guggenheim அருங்காட்சியகம், Alhambra மற்றும் Generalife பூங்கா, ஐரோப்பாவின் மிகப்பெரிய மீன்வளமான தாமரை – வடிவ L’Oceanogràfic, கிரான் கனாரியா கடற்கரைகள் மற்றும் பார்சிலோனாவில் உள்ள லா ராம்ப்லா ஆகிய இடங்கள் காணப்படுகின்றன.

அத்துடன் 2023 இல் 36.41 மில்லியன் சுற்றுலாப் பயணிகளைப் பெற்ற அதிகம் பார்வையிடப்பட்ட நாடாக ஸ்பெயின் விளங்குகின்றது.

இத்தாலி
இத்தாலியில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் செல்வதற்கான காரணம் அதன் கட்டிடக்கலை, கலாச்சாரம், கலை, ஓபரா, இலக்கியம், திரைப்படம் மற்றும் நாகரிகம் ஆகியவை நன்கு அறியப்பட்டதாகும்.

இந்த நாட்டில் மெய்சிலிர்க்க வைக்கும் நிலப்பரப்பு, அழகிய கடற்கரைகள், வரலாற்று கலைப்பொருட்கள், நினைவுச்சின்னங்கள் மற்றும் பலவற்றிற்காக சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதாக தெரிவிக்கப்படுகிறது.

38.41 மில்லியன் மக்கள் இத்தாலியில் உள்ள நகரங்களுக்கு சுற்றுலாவிற்காக சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா
மேலும், அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள டைம்ஸ் சதுக்கம் அமெரிக்காவிலும் உலகம் முழுவதிலும் அதிகம் பார்வையிடப்பட்ட இடமாக விளங்குவதுடன் வருடத்திற்கு 45.9 மில்லியன் பார்வையாளர்கள் வருகை தருவதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் டைம்ஸ் சதுக்கம் ஒரு வணிகச் சந்திப்பு ஆகும். இது கடைகள் மற்றும் விளம்பர பலகைகளால் ஒளிருவதைக் காணக்கூடியதாக இருக்கும்.

மெக்சிக்கோ
மெக்சிக்கோ நாடும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் சென்ற இடங்களில் ஒன்றாகும்.

இங்கு ஏராளமான தேவாலயங்கள், கத்தோலிக்க ஆயரின் இருப்பிடங்கள் மற்றும் குவாடலூப் கன்னியின் பசிலிக்காக்கள் உள்ளன.

அத்துடன் கலை காட்சியகங்கள், கச்சேரி அரங்குகள், உணவகங்கள், கண்காட்சிகள், சதுரங்கள் மற்றும் மெக்சிகன் அடையாளத்தை மட்டுமன்றி, இலத்தீன் அமெரிக்க கலாச்சாரத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து இடங்களும் உள்ளன.

இந்நாடானது 51.12மில்லியன் சுற்றுலாப் பயணிகளை சென்று பார்வையிட்ட நாடாக மெக்சிக்கோ விளங்குகின்றது.

பிரான்ஸ்
30 ஆண்டுகளுக்கும் மேலாக உலகின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலமாக விளங்கும் பிரான்ஸில் உள்ள சுற்றுலா அம்சங்களாக பல காணப்படுகின்றன.

இங்கு ஈபிள் கோபுரம், எண்ணற்ற உலகத் தரம் வாய்ந்த உணவகங்கள், மியூசி டு லூவ்ரே, வெர்சாய்ஸ் அரண்மனை, நோட்ரே-டேம் கதீட்ரல், கடற்கரைகள் கோட் டி அஸூர், மற்றும் டிஸ்னிலேண்ட் பாரிஸ் வரை மக்கள் விரும்பும் நாடாக உள்ளது.

பிரான்சின் தலைநகரான பாரிஸ், 2023 இல் 117 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் பார்வையிடப்பட்ட நகரமாக விளங்குவதுடன் ஐரோப்பாவில் அதிக சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்ட இடமாகும்.

Exit mobile version