உலகம்

இங்கிலாந்தில் சீக்கியர் மீது இனவெறுப்புத் தாக்குதல்: 14 வயது சிறுவன் கைது

Published

on

இங்கிலாந்தில் சீக்கியர் மீது இனவெறுப்புத் தாக்குதல்: 14 வயது சிறுவன் கைது

இங்கிலாந்தில் கடந்த மாதம் சீக்கியர் ஒருவர் மீது இனவெறுப்புத் தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக, 14 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

கடந்த மாதம், அதாவது, நவம்பர் மாதம் 21ஆம் திகதி, இந்தர்ஜித் சிங் என்பவர் இங்கிலாந்தின் Slough என்னுமிடத்திலுள்ள பூங்கா ஒன்றின் வழியாக நடந்துசென்றுகொண்டிருந்திருக்கிறார்.

அப்போது, சில பையன்கள் அவரை நெருங்கியிருக்கிறார்கள். ஒரு பையன் சிங்கின் தாடியைப் பிடித்து இழுக்க முயன்றிருக்கிறான். உடனே பையன்கள் அவரை சூழந்துகொண்டு அவரை மிதித்து தரையில் தள்ளியிருக்கிறார்கள்.

தாக்குதலில் சிங்குடைய விலா எலும்புகளில் மூன்று உடைந்ததுடன், அவரது கையிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக 14 வயது பையன் ஒருவன் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளான். தொடர்ந்து பொலிசார் அந்த துயர சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருவதாக தெரிவித்துள்ளார்கள்.

இதற்கிடையில், வளர்ந்துவரும் இளைய தலைமுறையிடமும் இனவெறுப்பு வளர்ந்துவருவது கவலையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

Exit mobile version