உலகம்

ஹமாஸ் படைகள் தொடர்பில் இத்தாலி, பிரான்ஸ், ஜேர்மனி நாடுகள் முன்வைத்த கோரிக்கை

Published

on

ஹமாஸ் படைகள் தொடர்பில் இத்தாலி, பிரான்ஸ், ஜேர்மனி நாடுகள் முன்வைத்த கோரிக்கை

ஹமாஸ் படைகள் மற்றும் அதன் ஆதரவாளர்களுக்கு எதிராக தற்காலிக தடைகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இத்தாலி, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரலுக்கு மூன்று நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களும் ஒரு கூட்டுக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர்.

ஹமாஸ் படைகள் மற்றும் அதன் ஆதரவாளர்களுக்கு எதிராக தற்காலிக தடைகளை விதிக்க தாங்கள் மூவரும் ஒருமனதாக பரிந்துரைப்பதாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இந்தத் தடைகளை விரைவாக நிறைவேற்றுவதால், ஹமாஸ் படைகளுக்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியத்தின் அர்ப்பணிப்பு மற்றும் இஸ்ரேலுடனான நமது ஒற்றுமை பற்றிய வலுவான அரசியல் செய்தியை உலகிற்கு உணர்த்த தங்களுக்கு உதவும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனிடையே, மேற்குக் கரையில் சட்டவிரோத இஸ்ரேலிய குடியேற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது தேசியத் தடைகளை விதிக்க பிரான்ஸ் நிர்வாகம் பரிசீலித்து வருகிறது என வெளிவிவகார அமைச்சர் Catherine Colonna தெரிவித்துள்ளார்.

மேற்குக் கரை நிலைமைகள் தங்களுக்கு வருத்தமளிப்பதாக உள்ளது என குறிப்பிட்டுள்ள அமைச்சர், குறிப்பாக கடும்போக்கு இஸ்ரேலிய குடியேற்றக்காரர்களால் நிகழ்த்தப்பட்ட பல வன்முறை சம்பவங்கள் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் தடை விதிப்பது தொடர்பில் இதுவரை ஒருமித்த கருத்து உருவாகவில்லை என்றே கூறப்படுகிறது.

Exit mobile version