உலகம்

புலம்பெயர்தலை தடுப்பதற்காக பிரித்தானியா விரயம்

Published

on

புலம்பெயர்தலை தடுப்பதற்காக பிரித்தானியா விரயம்

சட்டவிரோத குடியேறிகளை தடுக்கும் வகையில் பிரித்தானியாவால் பெருமளவிலான பணம் செலவளிக்கப்பட்டமை தொடர்பில் அந்நாட்டு அரசாங்கம் சட்ட சிக்கல்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவிற்குள் நுழையும் சட்டவிரோத குடியேறிகளை ருவாண்டாவுக்கு இடமாற்றம் செய்யும் திட்டமானது 2022ல் அறிவிக்கப்பட்டது.

இதனை பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் முன்னெடுத்திருந்தார். ஆனால் இந்த திட்டத்தில் இதுவரை ஒருவர் கூட ருவாண்டாவுக்கு அனுப்பப்படவில்லை.

ஆனால் இந்த திட்டத்திற்கு ஏற்கனவே 140 மில்லியன் பவுண்டுகள் செலவிடப்பட்டுள்ள நிலையில், மேலும் 100 மில்லியன் பவுண்டுகள் ருவாண்டாவுக்கு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த திட்டமானது முற்றிலும் தோல்வியை சந்திக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளமை மட்டுமின்றி, அந்நாட்டு அரசியல் பிரமுகர்களும் கடும் விமர்சனங்களையும் முன்வைத்துள்ளனர்.

ஆனால் ருவாண்டாவுக்கு அளித்துள்ள 240 மில்லியன் பவுண்டுகள் என்பது பிரித்தானியா அரசாங்கத்திற்கு ஒருபோதும் இழப்பல்ல எனவும், புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான குடியிருப்புகளுக்கு செலவிடப்படும் தொகையானது இனி சேமிப்பாக மாறும் எனவும் பிரித்தானிய அரசாங்ஙம் பதிலளித்துள்ளது.

மேலும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்காக 8 மில்லியன் பவுண்டுகளை பிரித்தானியா செலவிட்டு வந்துள்ளதாகவும், இனி அப்படியான செலவுகள் இருக்காது என்றும் அரசு தரப்பில் கூறப்படுகிறது.

Exit mobile version