உலகம்

கனடாவில் மீண்டும் நடைமுறைக்கு வரவுள்ள சட்டம்

Published

on

கனடாவில் மீண்டும் நடைமுறைக்கு வரவுள்ள சட்டம்

கனடாவில் சர்வதேசமாணவர்களுக்கு சவாலை ஏற்படுத்தும் இரண்டு சட்டங்கள் நடைமுறைக்கு வரவுள்ளன.

அதன்படி முதலாவதாக சர்வதேச மாணவர்கள் தங்கள் வங்கிக்கணக்கில் வைப்பிலிருக்கவேண்டிய தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதாவது சர்வதேச மாணவர்கள் தங்கள் வங்கிக்கணக்கில் வைத்திருக்கவேண்டிய தொகை, 10,000 கனேடிய டொலர்களிலிருந்து 20,635 டொலர்களாக உயர்த்தப்பட உள்ளதாக கனேடிய புலம்பெயர்தல் அமைச்சரான மார்க் மில்லர் தெரிவித்துள்ளார்.

இந்த நடைமுறை எதிர்வரும் ஜனவரி 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மாணவர்கள் கனடாவில் பொருளாதார சிக்கலை அனுபவிக்கக்கூடாது என்பதை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்தபடியாக சர்வதே மாணவர்கள் வேலை செய்யும் நேரத்திலும் மாற்றம் கொண்டுவரப்படவுள்ளது. சர்வதேச மாணவர்கள் வாரம் ஒன்றுக்கு 20 மணித்தியாலங்கள் மட்டுமே வேலை செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக வாரம் ஒன்றிற்கு 20 மணித்தியாலங்களுக்கும் அதிகமாக வேலை செய்யலாம் என்ற சட்டம் நடைமுறையில் இருந்த நிலையில் தற்போது அந்த சட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதன்படி பழைய சட்டம் எதிர்வரும் 2023 டிசம்பர் மாதம் 31ஆம் திகதியுடன் முடிவுக்கு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் சில நடுத்தர வர்க்கத்தினை சேரந்த சர்வதேச மாணவர்கள் இந்த வருமானம் வாழ்வாதாரத்திற்கு போதாது எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version