உலகம்

பிரித்தானியாவில் வேகமாக பரவும் ஆபத்தான இருமல்

Published

on

பிரித்தானியாவில் வேகமாக பரவும் ஆபத்தான இருமல்

பிரித்தானியாவில் 100 நாட்கள் வரையில் நீடிக்கும் மிக ஆபத்தான இருமல் வேகமாக பரவி வருவதாக சுகாதாரத்துறை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சளி போன்ற அறிகுறிகளுடன் தொடங்கும், இருமல் மூன்று மாதங்கள் வரை நீடிக்கும் எனவும் கடுமையான இருமல் பரவி வருவதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்திய ஆய்வுகளின்படி பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 250 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

100 நாட்கள் வரையில் நீடிக்கும் இந்த இருமலானது, கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாகவும், கடந்த 7 மாதங்களில் மட்டும் 716 பேர்கள் இந்த தொற்றும் தன்மை கொண்ட இருமலுக்கு இலக்காகியுள்ளதாகவும் சுகாதரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

எனவே கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் குழந்தையைப் பாதுகாக்கும் பொருட்டு தடுப்பூசி போடுவதை உறுதி செய்வது அவசியம் எனவும், குழந்தைகளில் இருமல் மிக தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தலாம் எனவும், கர்ப்ப காலத்தில் தாய்மார்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதே முதல் சில மாதங்களில் அந்த பிஞ்சு குழந்தைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்கான ஒரே வழி எனவும் கூறப்படுகிறது.

இந்த பாக்டீரியா தொற்றானது நுரையீரல் மற்றும் தொண்டையை பாதிக்கும். சில நேரங்களில் கடுமையான பிரச்சனைகளை ஏற்படுத்தும் எனவும், மோசமான இருமல் வாந்தி, விலா எலும்பு முறிவு மற்றும் சோர்வு போன்றவற்றுக்கு வழிவகுக்கும் அளவுக்கு தீவிரமாக இருக்கலாம் என சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த இருமலால் பாதிக்கப்பட்டால், முதல் அறிகுறி தென்படவே 7 முதல் 10 நாட்கள் வரை தாமதமாகலாம் எனவும், முதலில் லேசான இருமல் இருக்கும், அதன் பின்னர் மிக மோசமான பாதிப்பினை ஏற்படுத்தும் எனவும் எச்சரித்துள்ளனர்.

Exit mobile version