இந்தியா

பாகிஸ்தானில் தரையிறக்கப்பட்ட இந்திய விமானம்

Published

on

பாகிஸ்தானில் தரையிறக்கப்பட்ட இந்திய விமானம்

இந்தியாவின் அகமதாபாத் நகரில் இருந்து டுபாய்க்கு சென்ற போயிங் 737 ரக ஸ்பேஸ் ஜெட் விமானம் பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

குறித்த விமானம் (05.12.2023) இரவு தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பயணி ஒருவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அவருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை தேவைப்பட்ட நிலையில் இதுகுறித்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட போதே அந்த விமானம் பாகிஸ்தானின் கராச்சியில் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

பின்னர் உடல்நலம் பாதிக்கப்பட்ட நபரை விமானத்தில் இருந்து சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் கூறும்போது, அகமதாபாத்தில் இருந்து டுபாய்க்கு போயிங் 737 விமானம் சென்றபோது தர்வால் தர்மேஷ் (வயது 27) என்ற பயணிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

அவருக்கு சர்க்கரை அளவு குறைந்த நிலையில் மருத்துவ சிகிச்சைக்கு பிறகு அவர் குணமடைந்தார். விமானத்தில் எரிபொருள் நிரப்பப்பட்டு டுபாய்க்கு புறப்பட்டது என தெரிவித்துள்ளார்.

Exit mobile version