உலகம்

இஸ்ரேல் ஹமாஸ் போர்: இஸ்ரேல் தீட்டியுள்ள புதிய திட்டம்!

Published

on

இஸ்ரேல் ஹமாஸ் போர்: இஸ்ரேல் தீட்டியுள்ள புதிய திட்டம்!

இஸ்ரேல் ஹமாஸ் போர் நிறுத்தத்தின் பின்னர் ஹமாஸ் படையினரின் ரகசிய சுரங்கப்பாதைகளுக்குள் கடல் நீரை நிரப்ப இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து நடைபெற்று வரும் இஸ்ரேல் ஹமாஸ் யுத்தமானது முடிவு பெறாத நிலையில் அண்மையில் 7 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.

போர் நிறுத்த ஒப்பந்தத்தின் பின் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள தாக்குதலுக்கமைய இஸ்ரேல் புதிய போர் திட்டமொன்றை தீட்டியுள்ளது.

அதாவது காசா பகுதியில் ஹமாஸ் படையினர் பெரிய பலமாக இருக்கும் ரகசிய சுரங்கப்பாதைகளில் கடல் நீரை நிரப்ப திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மத்திய தரைக்கடலின் நீரை கொண்டு கிட்டத்தட்ட 500 கிலோ மீட்டர் நீளமுள்ள ஹமாஸின் ரகசிய சுரங்கப்பாதையை நிரப்பபுவதற்கு சில வாரங்களாவது எடுக்கும்.

ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீரை நிலத்தடிக்கு அனுப்பும் திறன் கொண்ட ஐந்து மோட்டார்களை வடிவமைத்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

ஏனினும் இந்த திட்டத்தின் மூலம் காசாவிலுள்ள நல்ல தண்ணீர் பாதிக்கப்படும் எனவும் கூறப்படுகின்றது.

மேலும் இந்த திட்டத்தை இஸ்ரேல் நடைமுறைபடுத்தினால் பல உலக நாடுகளின் கண்டனங்களை இஸ்ரேல் எதிர்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version