உலகம்

2024 ஆம் ஆண்டில் உலகிற்கு வரவிருக்கும் பேரழிவு

Published

on

2024 ஆம் ஆண்டில் உலகிற்கு வரவிருக்கும் பேரழிவு

எதிர்காலத்தில் நடப்பதை துல்லியமாக கணிக்கும் பாபா வாங்காவின் புயல் கணிப்பு ஒன்று நிறைவேறியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

பாபா வங்கா உயிரிழப்பதற்கு முன், இனிவரும் ஒவ்வொரு ஆண்டும் எப்படி இருக்கும் என பல்வேறு கணிப்புகளை சொல்லியுள்ளார். இவரது கணிப்புகளில் 85% அளவுக்கு நடந்தேறியுள்ளதாக கூறப்படுகின்றது.

பல்கேரியா நாட்டை சேர்ந்தவர் பாபா வங்கா 12 வயதில் சூறாவளியில் சிக்கி கண்பார்வையை இழந்தார். பார்வை பறிபோனாலும் கடவுள் தனக்கு எதிர்காலத்தை கணிக்கும் சக்தியை வழங்கியுள்ளதாக பல விடயங்களை கணித்துள்ளார்.

1996ல் பாபா வாங்கா மரணமடைந்திருந்தாலும், அவர் 5079ம் ஆண்டு வரையான கணிப்புகளை பதிவு செய்துள்ளதாகவே கூறப்படுகிறது.

அந்த வகையில், பாபா வங்காவின் புயல் கணிப்பு தற்போது பேசு பொருளாகியுள்ளன.

2023 இல் சூரிய புயல் ஏற்படும் என பாபா வங்கா கணித்துள்ள நிலையில் அந்த தகவல் தற்போது உண்மையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

சூரியப் புயலானது டிசம்பர் 1 ஆம் திகதி நண்பகலில் பூமியை தாக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது. சூரிய ஒளி மற்றும் பெருமளவில் கரோனல் வெளியேற்றங்கள் சூரியனின் மேற்பரப்பில் நிகழும்போது சூரியப் புயல் உருவாகிறது.

சூரியப் புயல் ஏற்பட இருக்கிறது என்பதையும் நிபுணர்கள் சிலர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

எனினும் பாபா வங்கா கணித்தது போன்று, பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும், ஆனால் 2023ல் சூரியப் புயல் ஏற்படும் என பாபா வங்கா கணிப்பு மீண்டுமொருமுறை நிஜமாகியுள்ளதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, 2024 ம் ஆண்டில் பயங்கரமான வானிலை நிகழ்வுகள் மற்றும் இயற்கை பேரழிவுகள் இருக்கும் என்றும் அவர் முன்னறிவித்துள்ளார்.

பூமியின் சுற்றுப்பாதையில் சிறிது மாற்றம் வரலாம். இது மிக மிக மெதுவாக நீண்ட காலத்திற்கு நடக்கும். ஆனால், இந்த மாற்றத்தில் வேகம் அதிகரித்தால் பயங்கர இயற்கை பேரிடர் ஏற்படும்.

2024 ஆம் ஆண்டிலும் அதிக சைபர் தாக்குதல் நிகழலாம். ஹேக்கர்களின் பலம் அதிகரிக்கும். இவர்கள் மின் உற்பத்தி ஆதாரங்களையும் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையங்களைத் தாக்கலாம். இதனால் தேசிய பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் ஏற்படும்.

2024 ஆம் ஆண்டில் மருத்துவத் துறையில் புதிய கண்டுபிடிப்புகள் சாத்தியமாகும்.

குறிப்பாக புற்றுநோய் மற்றும் அல்சைமர் போன்ற நோய்களுக்கு புதிய சிகிச்சைகள் கண்டுபிடிக்க வாய்ப்புள்ளது என்றும் கணித்துள்ளதாக கூறப்படுகின்றது.

Exit mobile version