உலகம்

தென் கொரியாவின் முதல் உளவு செயற்கைக்கோள்: எலான் மஸ்க்கின் ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது

Published

on

தென் கொரியாவின் முதல் உளவு செயற்கைக்கோள்: எலான் மஸ்க்கின் ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது

தென் கொரியாவின் முதல் ராணுவ உளவு செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.

வட கொரியாவின் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வரும் நிலையில், சமீபத்தில் வட கொரியா தங்களது முதல் உளவு செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது.

இந்நிலையில் வட கொரியாவுக்கு போட்டியாக முழுக்க முழுக்க தென் கொரியாவில் தயாரிக்கப்பட்ட அந்நாட்டின் முதல் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

தென் கொரியாவின் இந்த முதல் உளவு செயற்கைக்கோள் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள வாண்டன்பர்க் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து இந்த செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

தென் கொரியாவின் இந்த உளவு செயற்கைக்கோள் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version