உலகம்
வடகொரியா மீதான போர்த் தொடுப்பை யாராலும் தடுக்க முடியாது
வடகொரியா மீதான போர்த் தொடுப்பை யாராலும் தடுக்க முடியாது
வடகொரியா தனது செயற்கைக்கோள் நடவடிக்கைகளில் தலையிடுவதைப் போர் அறிவிப்பாகக் கருதுவதாகவும், அமெரிக்காவின் மூலோபாய சொத்துக்களுக்கு எதிராக ஏதேனும் தாக்குதல் நடந்தால், அதன் போர்த் தொடுப்பை யாராலும் தடுக்க முடியாது எனவும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்க உளவு செயற்கைக்கோள்களின் நம்பகத்தன்மையை நீக்குவதன் மூலம் விண்வெளியில் எந்த அமெரிக்க தலையீட்டினையும் முடக்குவோம் என வடகொரியா பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்தியை மேற்கோள் காட்டியே அமெரிக்க இந்த கருத்தை முன்வைத்துள்ளது.
“சட்டவிரோதமாக சமீபத்திய தொழில்நுட்பங்களை ஆயுதமாக்குவதன் மூலம் ஒரு இறையாண்மை அரசின் சட்டப்பூர்வ பிரதேசத்தை மீறுவதற்கு அமெரிக்கா முயற்சித்தால், அதனை அழிப்பதற்கான நடவடிக்கைகளை வடகொரியா பரிசீலிக்கும் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், வட கொரியா தனது முதல் இராணுவ உளவு செயற்கைக்கோளை நவம்பர் 21 அன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதாகக் கூறுகிறது.
மேலும் இந்த செயற்கை கோளானது அமெரிக்காவின் பிரதான நிலப்பகுதி, ஜப்பான் குவாம் ஆகியவற்றில் உள்ள இராணுவ தளங்களின் புகைப்படங்களை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த இரு தினங்களுக்கு முன்னர், பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா விடுத்த அழைப்பை வட கொரியா நிராகரித்திருந்தது.
இது குறித்து அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜோங்-உன்னின் சகோதரி கிம் யோ-ஜாங் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஒரு சுதந்திர நாட்டின் இறையாண்மை என்பது பேச்சுவாா்த்தையின் மூலம் சமரசம் செய்துகொள்ளக்கூடியது இல்லை.
எனவே, அதற்காக அமெரிக்கா விடுக்கும் அழைப்பை ஒருபோதும் ஏற்க முடியாது.” என்றாா்.
சோவியத் யூனியனின் ஆதரவுடன் வட கொரியாவும், அமெரிக்க ஆதரவுடன் தென் கொரியாவும் நடத்திய கொரியப் போா் கடந்த 1953-இல் முடிவுக்கு வந்தது.
அதன் பிறகும் அமெரிக்கா-வடகொரியா இடையே பதற்றம் நீடித்து வருகிறது. எனினும், கடந்த 2018இல் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும், வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னும் 3 முறை நேரில் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தியிருந்தார்.
இருப்பினும், இந்தப் பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்த நிலையில், தனது உளவு செயற்கைக்கோளை வட கொரியா அண்மையில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதற்கு கண்டனம் தெரிவித்த அமெரிக்கா, தங்களுடன் மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்த வட கொரியாவுக்கு அழைப்பு விடுத்திருந்தது.