உலகம்
கேரளாவில் இஸ்ரேலிய பெண் சடலமாக மீட்பு.., யோகா ஆசிரியரால் நடந்த விபரீதமா?
கேரளாவில் இஸ்ரேலிய பெண் சடலமாக மீட்பு.., யோகா ஆசிரியரால் நடந்த விபரீதமா?
இந்திய மாநிலமான கேரளாவில், இஸ்ரேலிய பெண் ஒருவர் கழுத்தறுத்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மாநிலமான கேரளாவில் உள்ள கொல்லத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ண சந்திரன். இவர் ஒரு யோகா ஆசிரியர். இவரிடம் யோகா கற்பதற்காக இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ஸ்வத்வா (36) என்ற பெண் ஒருவர் வந்திருந்தார்.
இதில் ஸ்வத்வா, கிருஷ்ண சந்திரனின் உறவினர் வீட்டில் தங்கியிருந்து யோகா கற்று வந்தார். இந்நிலையில், நேற்று மாலை வீட்டில் கழுத்தறுத்து நிலையில் சடலமாக ஸ்வத்வா கிடந்துள்ளார். அதேபோல, யோகா ஆசிரியர் கிருஷ்ண சந்திரனும் கழுத்தில் காயங்களுடன் கிடந்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்தவுடன், சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் ஸ்வத்வாவின் உடலை மீட்டனர். படுகாயங்களுடன் இருந்த கிருஷ்ண சந்திரனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஸ்வத்வாவை கொலை செய்துவிட்டு கிருஷ்ண சந்திரன் தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் கிருஷ்ண சந்திரன் பணியாற்றிய போது, ஸ்வத்வாவை கேரளாவுக்கு தன்னுடன் அழைத்து வந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக, பொலிஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.