உலகம்
ஐரோப்பாவில் குடியேறும் அகதிகளுக்கு சாதகமான செய்தி
ஐரோப்பாவில் குடியேறும் அகதிகளுக்கு சாதகமான செய்தி
ஐரோப்பிய நாடுகளில் குடியேற விரும்பும் அகதிகள் மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரின் வழியாக கடத்தப்படுவதைத் தடை செய்யும் சட்டத்தை, அந்நாட்டின் இராணுவ அரசு திரும்ப பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.
கடந்த 2015-ஆம் ஆண்டில் அகதிகள் தொடர்பாக இயற்றப்பட்ட இந்த சட்டம் திரும்பப் பெறப்படுவதோடு இதன் கீழ் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவா்கள் குறித்த குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அவா்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனைகளிலிருந்தும் அவர்கள் விடுதலைசெய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டில் நைஜரின் அரசாங்கத்தை அந்நாட்டு இராணுவம், கைப்பற்றியதிலிருந்து ஐ.நா, ஐரோப்பிய யூனியன் மற்றும் ஆப்பிரிக்க யூனியன் உள்ளிட்ட அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், ஐரோப்பிய நாடுகளுக்கு நைஜா் வழியாக அகதிகள் கடத்தப்படுவதைத் தடுக்கும் சட்டத்தை அந்த நாட்டு இராணுவ அரசு திரும்பப் பெற்றுள்ளமையை தொடர்ந்து ஐரோப்பிய யூனியனிக்கும், நைஜருக்கும் இடையிலான தூதரக உறவு பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என குறிப்பிடப்படுகிறது.