உலகம்

சுவிட்சர்லாந்தில் மாதம் ஒன்றிற்கு வேலையை விட்டுச் செல்லும் 300 செவிலியர்கள்… நிலவும் பணியாளர் பற்றாக்குறை

Published

on

சுவிட்சர்லாந்தில் மாதம் ஒன்றிற்கு வேலையை விட்டுச் செல்லும் 300 செவிலியர்கள்… நிலவும் பணியாளர் பற்றாக்குறை

புலம்பெயர்வோரின் வருகையை விரும்பாத சுவிட்சர்லாந்தில், மருத்துவத்துறை முதலான சில அத்தியாவசியத் துறைகளில் கடும் பணியாளர் தட்டுப்பாடு நிலவுவதாக செய்தி வெளியாகியுள்ள அதே நாளில், மாதம் ஒன்றிற்கு 300 செவிலியர்கள் வேலையை விட்டுச் செல்வதாக மற்றொரு செய்தி வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

சுவிட்சர்லாந்தில்,மருத்துவத்துறையில், செவிலியர்கள், endocrinologists மற்றும் பார்மஸி பணியாளர்கள், தகவல் தொழில்நுட்பத்துறையில், developers, software மற்றும் applications analysts, SAP consultants ஆகிய பணி செய்வோர், பொறியியல் துறையில், mechanical engineering technicians, heating planners ஆகிய பணியாளர்களுக்கு கடும் பற்றாக்குறை நிலவுகிறது.

அதே நேரத்தில், மாதம் ஒன்றிற்கு 300 செவிலியர்கள் வேலையை விட்டுச் செல்கிறார்களாம். விடயம் என்னவென்றால், இந்த இரண்டு செய்திகளுக்கும் தொடர்பு உள்ளது.

அதாவது, பணியாளர் பற்றாக்குறை நிவுவதால், வேறு வார்த்தைகளில் கூறினால், ஒரு மருத்துவமனையில் குறைவான செவிலியர்களே உள்ளதால், அவர்களுக்கு வேலைப்பளு அதிகமாக உள்ளது.

கொஞ்சம் செவிலியர்கள் ஏராளமான நோயாளிகளை கவனித்துக்கொள்ளும் நிலையிலும், குறைவான ஊதியமே கொடுக்கப்படுகிறதாம். வேலையில் அதிக நேரம் செலவிட வேண்டியுள்ளதால் சொந்த வேலைகளையும், வீட்டையும் கவனிக்க முடியாத நிலைமை ஆகிய காரணங்களால் செவிலியர்கள் வேலையை விட்டுச் செல்கிறார்களாம்.

சமீபத்திய தகவல்களின்படி, 36 சதவிகித இளம் செவிலியர்கள், 20க்கும் 24 வயதுக்கும் இடையில் உள்ளவர்கள், சில ஆண்டுகள் வேலை பார்த்த நிலையிலேயே வேலையை விட்டுச் செல்கிறார்களாம்.

ஆக, சுவிட்சர்லாந்தில், சுமார் 7,000 செவிலியர் பணியிடங்கள் காலியாக உள்ளனவாம்!

Exit mobile version