உலகம்
பிச்சை எடுத்து ஐந்தே ஆண்டுகளில் கோடீஸ்வரியான இளம்பெண்
பிச்சை எடுத்து ஐந்தே ஆண்டுகளில் கோடீஸ்வரியான இளம்பெண்
பொதுவாக எல்லோருக்கும் பிச்சைக்காரனைப் பற்றி ஒரே கருத்துதான் இருக்கும். மிகவும் ஏழ்மையானவர், பிழைப்புக்காக எதுவும் செய்ய முடியாமல் பிச்சை எடுக்கும் நபர் என்று தான் நினைப்போம். பல பிச்சைக்காரர்கள் கோவில்கள் மற்றும் சாலையோரங்களில் காணப்படுகின்றனர்.
பிச்சை எடுப்பது சிலருக்கு கட்டாயம், பலர் அதை பணம் சம்பாதிப்பதற்கான வழிமுறையாக கருதுகின்றனர். பல நேரங்களில் மக்கள் பிச்சை எடுப்பதைத் தங்கள் தொழிலாகக் கொண்டு பின்னர் பணக்காரர்களாக மாறுகிறார்கள்.
இந்த பிச்சைக்காரர்களில் சிலர் தங்கள் அவலத்தை காட்டி மற்றவர்களின் உணர்ச்சிகளுடன் விளையாடுகிறார்கள். பொய்யான கதைகளைச் சொல்லி மற்றவர்களிடம் பணம் வாங்குகிறார்கள். அவ்வாறு பல வகையில் பொய் சொல்லி, பிச்சையெடுத்து பாகிஸ்தான் பெண் ஒருவர் கோடீஸ்வரியாக மாறியுள்ளார்.
தான் பாகிஸ்தானைச் சேர்ந்தவள் என்றும், வெறும் ஐந்தே ஆண்டுகளில் பிச்சை எடுத்து இவ்வளவு பணம் சம்பாதித்ததாகவும், இப்போது இந்தோனேசியாவில் வசிப்பதாகவும் சிறுமி கூறுகிறார்.
அதுமட்டுமின்றி தான் எப்படி பணக்காரர் ஆனேன் என்பதையும் வெளிப்படுத்தியுள்ளார். இந்த வீடியோ வெளியான பிறகு, மக்கள் பல்வேறு வகையான எதிர்வினைகளை அளித்து வருகின்றனர்.
மலேசியாவில் தனக்கு இரண்டு பிளாட்கள், ஒரு கார் மற்றும் சொந்த தொழில் இருப்பதாகவும், அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அங்கு வசிக்கின்றனர் என்றும் கூறுகிறார்.
வைரலான வீடியோவில், அந்த பெண் தனது பெயர் லைபா (Laiba) என்று கூறுகிறார். 1 நிமிடம் 25 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவில், கடந்த ஐந்து வருடங்களில் பிச்சை எடுத்து நிறைய பணம் சம்பாதித்ததாக அந்த இளம்பெண் கூறுகிறார்.
தினமும் பிச்சை எடுத்து தான் பணக்காரர் ஆனதை அந்த அவரே ஒப்புக்கொண்டார். இதையெல்லாம் ஏன் சொல்கிறீர்கள் என்று கேட்டதற்கு, உண்மையை மறைக்க முடியாது என்றார். மக்கள் உங்களுக்கு எப்படி தானம் வழங்குகிறார்கள் என்று கேட்டதற்கு, அவர்கள் பொய்யான கதைகளைச் சொல்லி பணம் கேட்போம் என்று கூறினார்.
இந்த வீடியோ சமூக ஊடக தளமான X-ல் (@shahfaesal) கணக்கு மூலம் பகிரப்பட்டது. அந்த வீடியோவுக்கு ‘அண்டை நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர்கள்’ என்று தலைப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோவை 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இந்த வீடியோ வைரலாக பரவி வருவதால் மக்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இன்னும் பலர் மாறுபட்ட கருத்தை வெளிப்படுத்திவருகின்றனர்.