உலகம்
நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. 5 நாட்களுக்கு மழை: வானிலை மையம் தகவல்
நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. 5 நாட்களுக்கு மழை: வானிலை மையம் தகவல்
தெற்கு அந்தமான் வங்கக் கடல் பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்றும் அது புயலாக மாற வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை 27 ம் தேதி ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது.
இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து 29 ம் தேதியன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது மேலும் வலுவடைந்து டிசம்பர் முதல் வாரத்தில் புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும், அந்த காலகட்டத்தில் தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை பொழிவதற்கான வாய்ப்புகள் தெரிகிறது.
இதன் காரணமாகவும், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாகவும் தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் ஞாயிறு(நவ26) முதல் வெள்ளிக்கிழமை (டிச1) வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை, புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.