உலகம்

இஸ்ரேலில் இருந்து சீனாவுக்கு சென்ற ஜிம் லுவாண்டா கப்பல் கடத்தல்: செங்கடலில் அத்துமீறும் ஹவுதி படையினர்

Published

on

இஸ்ரேலில் இருந்து சீனாவுக்கு சென்ற ஜிம் லுவாண்டா கப்பல் கடத்தல்: செங்கடலில் அத்துமீறும் ஹவுதி படையினர்

ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படை மீண்டும் சீனாவுக்கு பயணம் செய்த ஜிம் லுவாண்டா என்ற கப்பலை கடத்தியுள்ளனர்.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரில், ஹமாஸ் படையினருக்கு ஆதரவு தெரிவித்து ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படை செங்கடல் பகுதியில் இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக சமீபத்தில் துருக்கியில் இருந்து இந்தியா நோக்கி வந்த சரக்கு கப்பலை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படை செங்கடல் பகுதியில் வைத்து சிறைப்பிடித்தனர்.

மேலும் இரு தினங்களுக்கு முன்பு செங்கடல் பகுதிக்கு ரோந்துக்கு சென்ற அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஆளில்லாத ட்ரோன் தாக்குதலை ஹவுதி படையினர் முன்னெடுத்தனர்.

ஆனால் அமெரிக்க கடற்படை துரிதமாக செயல்பட்டு அத்தனை தாக்குதலுக்கு களமிறக்கப்பட்ட அனைத்து ட்ரோன்களையும் இடைமறித்து சுட்டு வீழ்த்தினர்.

கடத்தல் இந்நிலையில் இஸ்ரேலில் இருந்து சீனாவுக்கு செங்கடல் வழியாக பயணம் செய்த ஜிம் லுவாண்டா கொள்கலன் கப்பலை ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படை கடத்தியுள்ளது.

இதன் மூலம் இஸ்ரேலுக்கு எதிரான கடல் வழி முற்றுகையை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் முன்னெடுக்கின்றனர் என்பது தெளிவாக தெரியவருகிறது.

ஹவுதி படையினரால் கடந்த 3 நாட்களில் கடத்தப்பட்ட அல்லது தாக்கப்பட்ட இஸ்ரேலுடன் தொடர்புடைய 3வது கப்பல் இதுவாகும்.

Exit mobile version