உலகம்

நிபந்தனையுடன் இஸ்ரேலுக்கு ஆயுத உதவி… ஜோ பைடன் சொல்வது என்ன?

Published

on

நிபந்தனையுடன் இஸ்ரேலுக்கு ஆயுத உதவி… ஜோ பைடன் சொல்வது என்ன?

இஸ்ரேலுக்கு நிபந்தனை விதிக்கப்படுமா? என்ற கேள்விக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பதில் அளித்துள்ளார்.

இது தொடர்பாக ஜோ பைடன் தெரிவிக்கையில் “காசாவில் நான்கு நாள் பேர் நிறுத்தம், அதையும் தாண்டி நீட்டிக்கும் என நம்புகிறேன். இன்று பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள். அதற்கு அடுத்தஅடுத்த நாட்களும் விடுவிக்கப்படுவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கிறேன்.

நிபந்தனையுடன் இஸ்ரேலுக்கு ராணுவ உதவி வழங்குவது என்பது பயனுள்ள சிந்தனைதான். ஆனால், இதை தொடங்கினால், இப்போது நாம் எங்கே இருக்கிறோமோ, அதை நாம் பெற்றிருப்போம் என்று நினைக்கவில்லை” என்றார்.

மேலும், நிபந்தனை குறித்து எந்த உதாரணத்தையும் ஜோ பைடன் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version