உலகம்

சீனாவில் அதிகரித்து வரும் சுவாச நோய்

Published

on

சீனாவில் அதிகரித்து வரும் சுவாச நோய்

சீனாவில் அதிகரித்து வரும் சுவாச நோய் குறித்து உலக சுகாதார நிறுவனம் விளக்கம் கேட்டுள்ளது.

சீனாவில் உள்ள ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் குழந்தைகள் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாகக் உலக சுகாதார நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளன.

இதனை தொடர்ந்து சீன அதிகாரிகளிடம் சுகாதார நிறுவனம் விளக்கம் கோரியுள்ளது.

தேசிய சுகாதார ஆணையத்தின் சீன அதிகாரிகள் நவம்பர் 13ஆம் திகதி செய்தியாளர் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

இதன்போது நாட்டில் அதிகரித்து வரும் சுவாச நோய் சம்பவங்கள் பற்றி தெரிவிக்கப்பட்டதாக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொவிட் கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டதாலும் சளிக்காய்ச்சல், ‘மைக்கோபிளாஸ்மா நிமோனியா’ எனும் குழந்தைகளைப் பாதிக்கும் பொதுவான தொற்றுக் கிருமி, சுவாச ஒத்திசைவு கிருமி மற்றும் கொவிட்-19 தொற்று போன்ற நோய்க் கிருமிகளால் சுவாச நோய் ஏற்படுவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதற்கமைய சுகாதாரப் பராமரிப்பு வசதிகளில் மேம்பட்ட நோய்க் கண்காணிப்பு தேவைப்படுவதை சீன அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், நோயாளிகளை நிர்வகிக்க சுகாதார முறையை வலுப்படுத்த வேண்டியிருப்பதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதன்படி 2019 பிற்பகுதியிலும் 2020 முற்பகுதியிலும் சீனாவின் வூஹான் நகரில் பரவியதாகக் கூறப்படும் கொவிட்-19 தொற்று சம்பவங்களில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று சீன அரசாங்கமும் சுகாதார நிறுவனமும் கேள்விகளை எதிர்நோக்கியுள்ளன.

Exit mobile version