உலகம்
15,000 ராணுவ வீரர்களை பாரீஸுக்கு அனுப்பும் பிரான்ஸ்
15,000 ராணுவ வீரர்களை பாரீஸுக்கு அனுப்பும் பிரான்ஸ்
நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளுக்கிடையே, பிரான்ஸ் மற்றொரு முக்கிய விடயம் மீது கவனம் செலுத்திவருகிறது. அது, அடுத்த ஆண்டு பாரீஸில் நடக்க இருக்கும் ஒலிம்பிக் போட்டிகள்!
அடுத்த ஆண்டு, அதாவது 2024ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 26ஆம் திகதி முதல் ஆகத்து மாதம் 11ஆம் திகதி வரை ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற உள்ளன.
அதைத் தொடர்ந்து, பாரா ஒலிம்பிக் போட்டிகளும் நடைபெற உள்ளதால், 15,000 ராணுவ வீரர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பாரீஸுக்கு அனுப்பப்பட இருக்கிறார்கள். அத்துடன், பல்லாயிரக்கணக்கான பொலிசாரும் தனியார் பாதுகாவலர்களும் பாரீஸில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கிறார்கள்.
மேலும், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக செயற்கை நுண்ணறிவுத்திறனுடன் கூடிய கமெராக்களைப் பயன்படுத்தும் வகையில் புதிய சட்டமும் அமுலுக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.