உலகம்

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் நீட்டிக்கப்படாவிட்டால்… பற்றியெரியும்: எச்சரிக்கும் ஈரான் அமைச்சர்

Published

on

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் நீட்டிக்கப்படாவிட்டால்… பற்றியெரியும்: எச்சரிக்கும் ஈரான் அமைச்சர்

ஹமாஸ் குழுவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போர் நிறுத்தம் நீட்டிக்கப்படாவிட்டால், மத்திய கிழக்கு முழுவதும் போர் பரவும் அபாயமிருப்பதாக ஈரான் வெளிவிவகார அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

லெபனான் செய்தி ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர் குறித்த கருத்தை பதிவு செய்துள்ளார். காஸா பகுதியில் குறைந்தது நான்கு நாட்களுக்கு போர் நிறுத்தம் செய்ய இஸ்ரேலும் ஹமாஸும் புதன்கிழமை ஒப்புக்கொண்டன.

காஸாவிற்கு மனிதாபிமான உதவிகள் முன்னெடுக்கவும், இஸ்ரேலிய பணயக்கைதிகள் குறைந்தது 50 பேர்களை விடுவிக்கவும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இஸ்ரேல் சிறையில் வாடும் பாலஸ்தீன மக்களில் 150 பேர்கள் விடுவிக்கப்படவும் முடிவாகியுள்ளது.

இந்த நிலையில் ஈரான் வெளிவிவகார அமைச்சர் Hossein Amir-Abdollahian பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் விஜயம் செய்ய இருப்பதாகவும், காஸா மீது இஸ்ரேல் முன்னெடுக்கும் கொடூர தாக்குதல்களை தடுத்து நிறுத்தவும்,

காஸா மீதான தடைகளை நீக்கவும், மனிதாபிமான உதவிகளை காஸா மக்களுக்கு முன்னெடுக்கும் பொருட்டு நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் இந்த பயணம் பயன்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நான்கு நாட்கள் என்ற இந்த போர் நிறுத்தம் கண்டிப்பாக நீட்டிக்கப்பட வேண்டும் என்றார். இல்லை எனில் மத்திய கிழக்கு முழுவதும் இதன் தாக்கம் இருக்கும் எனவும், அது மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version