உலகம்
எக்ஸ் விளம்பர வருமானம் காசா மக்களுக்கு வழங்கப்படும் – எலான் மஸ்க் அறிவிப்பு
எக்ஸ் விளம்பர வருமானம் காசா மக்களுக்கு வழங்கப்படும் – எலான் மஸ்க் அறிவிப்பு
எக்ஸ் வலைதளத்தின் மூலம் கிடைக்கும் வருமானம், காசாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நன்கொடையாக வழங்கப்படும் என்று எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
காசா மீதான தாக்குதலை 4 நாட்கள் நிறுத்தி வைப்பதாக இஸ்ரேல் அறிவித்தது. இதுவரை போரில் 13,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களும், இஸ்ரேலில் 1,200 பேரும் உயிரிழந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தாலும், வான்வழித் தாக்குதல்களால் பல மருத்துவமனைகள் சிதைந்தன.
இந்த நிலையில் எக்ஸ் சமூக வலைதளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க், காசா மக்களுக்காக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர், ‘எக்ஸ் வலைதளத்தின் விளம்பரம் மற்றும் சந்தாதாரர்கள் மூலம் கிடைக்கும் வருமானம், போரில் பாதிக்கப்பட்ட மருத்துமனைகளை சீரமைக்கவும், காசாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காகவும் நன்கொடையாக வழங்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.