உலகம்

இஸ்ரேலே எங்கள் இலக்கு: ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கடத்தல்

Published

on

இஸ்ரேலே எங்கள் இலக்கு: ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கடத்தல்

பாலஸ்தீனத்தின் காசா அமைப்பினருக்கு ஆதரவு தெரிவித்து எமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கேலக்சி லீடர் என்ற சரக்கு கப்பலை கடத்தியுள்ளனர்.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான தீவிர போர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், எமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படை ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இஸ்ரேலியர்கள் உட்பட பல நாடுகளை சேர்ந்த 52 பேர் பயணம் செய்த கேலக்சி லீடர் என்ற சரக்கு கப்பலை தெற்கு செங்கடல் பகுதியில் வைத்து கடத்தியுள்ளனர்.

வானுர்தி மூலம் கப்பல் மேல் தளத்திற்கு வந்த இறங்கிய ஹவதி கிளர்ச்சியாளர்கள் படை, கப்பலை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துளள்ள காணொளி தர்போது சமுக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

துருக்கியில் இருந்து இந்தியா நோக்கி சென்று கொண்டு இருந்த போது கேலக்ஸ் லீடர் சரக்கு கப்பல் கடத்தப்பட்டு இருப்பதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஹவுதி படையினரின் செயலுக்கு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதன்படி இஸ்ரேலிய கப்பல்கள் எங்களது நியாயமான இலக்கு என்று ஹவதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இஸ்ரேல் தொடர்பான கப்பல்கள் எங்கிருந்தாலும், அதன் மீது எங்கள் நடவடிக்கையை எடுக்க தயங்க மாட்டோம் என ஹவதி கிளர்ச்சியாளர்கள் அமைப்பின் இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

Exit mobile version