உலகம்

பிணைக்கைதிகள் விடுவிப்பு குறித்து வெளியாகியுள்ள சமீபத்திய தகவல்

Published

on

பிணைக்கைதிகள் விடுவிப்பு குறித்து வெளியாகியுள்ள சமீபத்திய தகவல்

காசாவில் ஹமாஸ் குழுவினரால் பிடித்துவைக்கப்பட்டுள்ள பிணைக்கைதிகளில் சுமார் 50 பேரை விடுவிக்கும் வகையில் இஸ்ரேல் பாலஸ்தீனத்துக்கிடையே ஒப்பந்தம் ஒன்றை நிறைவேற்ற கத்தார் முயன்றுவரும் நிலையில், ஒப்பந்தம் கிட்டத்தட்ட நெருங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒப்பந்தம் குறித்து சில அமெரிக்க ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ள நிலையில், சுமார் 50 பிணைக்கைதிகள் வரை விடுவிக்கப்படலாம் என தெரியவந்துள்ளது.

பதிலுக்கு, இஸ்ரேல் மூன்று முதல் ஐந்து நாட்கள் போர் நிறுத்தம் செய்ய ஹமாஸ் தரப்பில் கோரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், காசாவில் பிணைக்கைதிகளாக இருக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரையும் விடுவிக்குமாறு இஸ்ரேல் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதற்கு பதிலாக, இஸ்ரேல் சிறைகளில் உள்ள பெரிய எண்ணிக்கையிலான பாலஸ்தீன நாட்டவர்களான பெண்கள் மற்றும் குழந்தைகளை விடுவிக்க இஸ்ரேல் தரப்பு தயாராக இருப்பதாகவும் ஒரு தகவல் கூறுகிறது.

இந்நிலையில், கத்தார் பிரதமரான Sheikh Mohammed bin Abdulrahman Al Thani, ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் சில சிறிய நடைமுறைப்பிரச்சினைகள் மட்டுமே இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அதாவது, எத்தனை பிணைக்கைதிகளை விடுவிப்பது என்பது முதலான சில பிரச்சினைகள் மட்டுமே தற்போது நிலவுவதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில், இது போர் நிறுத்தம் செய்வதற்கு சரியான நேரமா என இஸ்ரேல் தரப்பில் கொஞ்சம் தயக்கமும் நிலவுவதாக கூறப்படுகிறது.

Exit mobile version