உலகம்

இஸ்ரேலிய படையினர் மருத்துவமனைக்குள் ஆயுதங்களை வைத்துவிட்டு மீட்டதாக சொல்கின்றனர் – ஹமாஸ்

Published

on

இஸ்ரேலிய படையினர் மருத்துவமனைக்குள் ஆயுதங்களை வைத்துவிட்டு மீட்டதாக சொல்கின்றனர் – ஹமாஸ்

இஸ்ரேல் அல்ஸிபா மருத்துவமனைக்குள் ஆயுதங்களை வைத்துவிட்டு அங்கு ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கின்றது என ஹமாஸ் தெரிவித்துள்ளது.

அல்ஸிபா மருத்துவமனையில் ஆயுதங்களை மீட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளதுடன் இது தொடர்பில் படங்களை வெளியிட்டுள்ளது.

எனினும் குறிப்பிட்ட ஆயுதங்கள் எடுக்கப்பட்டவேளை எந்த ஊடகமும் அங்கு காணப்படவில்லை என பிபிசி தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய இராணுவத்தினர் ஆயுதங்களை கொண்டுவந்து அவற்றை மருத்துவமனையில் வைத்துவிட்டு ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர் என்பதை நிராகரிக்க முடியாது என ஹமாஸின் சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனைகளுக்கு அழுத்தம் கொடுத்து  காசாவிலிருந்து மக்களை வெளியேற்றுவதே இஸ்ரேலின் நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.

குண்டுவீச்சுகள்ள முற்றுகை தாக்குதல் போன்றவற்றால் காசாவில் 25 மருத்துவமனைகள் செயல் இழந்துள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ்தான் மருத்துவமனைகளுக்குள் இருந்து செயற்படவில்லை என தெரிவித்துள்ளது.

இரண்டுதரப்பு தெரிவிப்பதையும்உறுதி செய்ய முடியாத நிலையில் உள்ளதாக சர்வதேச ஊடகம் தெரிவிக்கின்றது.

Exit mobile version