உலகம்

இஸ்ரேல் பயங்கரவாத நாடு..! முக்கிய நோட்டோ நாட்டின் ஜனாதிபதி பேச்சு

Published

on

இஸ்ரேல் பயங்கரவாத நாடு..! முக்கிய நோட்டோ நாட்டின் ஜனாதிபதி பேச்சு

பாலஸ்தீனம் மீதான தாக்குதலை கண்டித்து இஸ்ரேல் ஒரு பயங்கரவாத நாடு என துருக்கி ஜனாதிபதி எர்டோகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் ஹமாஸ் படையினர் இடையே கடுமையான போர் ஒரு மாதத்தை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் அழிக்கும் நோக்கத்தில் இஸ்ரேல்  தாக்குதல் நடத்தி வருவதால், பாலஸ்தீனத்தின் காசாவில் உள்ள மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.

அத்துடன் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டு வருகின்றனர். காசாவில் தரைவழி தாக்குதலை தொடங்கியதற்கு எகிப்து, ஜோர்டான், சவுதி அரேபியா, துருக்கி ஆகிய நாடுகள் கடுமையான கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில் தாக்குதலை கண்டித்து பஹ்ரைன் நாடாளுமன்றம் தங்களது இஸ்ரேலுக்கான தூதரை திரும்ப பெறுவதாக அறிவித்தது.

இதைப்போல இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்த கோகோ கோலா மற்றும் நெஸ்லே நிறுவனங்களின் பொருட்களுக்கு துருக்கி தடை விதித்தது.

இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த துருக்கி ஜனாதிபதி ரசிப் தைய்யிப் எர்டோகன், ஒரு நகரையும், அதன் மக்களையும் முழுமையாக அழிக்க இஸ்ரேல் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

அதே சமயம் இஸ்ரேல் ஒரு பயங்கரவாத நாடு என்பதை தெளிவாக வெளிப்படையாக தெரிவிக்கிறேன்.

பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் அரசியல் மற்றும் இராணுவ தளபதிகள் மீது சர்வதேச நீதிமன்ற விசாரணை நடத்தப்படும் எனவும் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து துருக்கி ஜனாதிபதியின் கருத்துக்கு இஸ்ரேல் ஜனாதிபதி பெஞ்சமின் நெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் படைகளை சிதறிடித்து வருகிறோம் என குறிப்பிட்டுள்ள தளபதி பார், நிலத்திலும் நிலத்திற்கடியிலும் அவர்களை வேட்டையாடுவதாக தெரிவித்துள்ளார். ஆயிரக்கணக்கான தீவிரவாதிகளை வேட்டையாடியுள்ளதாக குறிப்பிட்ட பார், ஒவ்வொருவரையும் தேடிச் செல்வோம் என்றார்.

மத்திய கிழக்கு நாடுகளில் மொத்தமாக செயல்பட இஸ்ரேல் தயாராகி வருவதாக குறிப்பிட்டுள்ள தளபதி பார், எந்த மூலையில் சென்று ஒளிந்துகொண்டாலும் விடுவதாக இல்லை என்றார்.

அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் படைகள் முன்னெடுத்த தாக்குதலை அடுத்து, லெபனான் மற்றும் யேமனில் உள்ள ஈரான் ஆதரவு பயங்கரவாத குழுக்கள் இஸ்ரேல் – ஹமாஸ் போரில் களமிறங்க இருப்பதாக பலமுறை அச்சுறுத்தி வருகின்றன.

மட்டுமின்றி, இந்த இரு நாடுகளில் இருந்தும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைகள் மீது தாக்குதல் முன்னெடுத்தும் வருகின்றனர். இதனிடையே, நவம்பர் 3ம் திகதி ஈரான் தலைவர் ஹசன் நஸ்ரல்லா லெபனான் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

லெபனானின் எந்த பகுதியையும் எதிரிகள் தாக்க முயல்வது அவர்களின் முட்டாள்த்தனமான முடிவாக இருக்கும் என்றும், பெரும் விலையளிக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார். மட்டுமின்றி, இஸ்ரேல் மீது ஹமாஸ் முன்னெடுத்த தாக்குதலை பாராட்டியுள்ள நஸ்ரல்லா, இது புனிதப் போர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version