உலகம்

சீன ஜனாதிபதியை சர்வாதிகாரி என விமர்சித்த ஜோ பைடன்

Published

on

சீன ஜனாதிபதியை சர்வாதிகாரி என விமர்சித்த ஜோ பைடன்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் கம்யூனிச நாட்டை வழிநடத்தும் ஒரு சர்வாதிகாரி எனவும் சீன அரசாங்கம் பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது முற்றிலும் மாறுபட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

ஆபெல் உச்சி மாநாட்டின் பின் செய்தியாளர்கள் கேட்ட கேள்விற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அமெரிக்காவில் நடந்த ஆபெல் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் சான்பிரான்சிஸ்கோ நகருக்குச் சென்று அதன்பின் கலிபோர்னியா சென்ற ஜனாதிபதி ஜின்பிங்கை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஆகியோரும் தனியாகச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

அவர்கள் இரு நாட்டு இராணுவ உறவு, ரஷியா-உக்ரைன் போர், தைவான் விவகாரம் உள்ளிட்டவை குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் வர்த்தக போக்குவரத்து, பொருளாதார தடை, அமெரிக்க வான்வெளி பகுதியில் சீன உளவு பலூன் பறந்த விவகாரம் தொடர்பாக நீண்ட காலமாக பல்வேறு பிரச்சினைகள் இருந்து வரும் சூழ்நிலையில் இரு நாட்டு தலைவர்கள் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியமை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Exit mobile version