உலகம்

காசாவின் வைத்தியசாலைக்குள் அதிரடியாக நுழைந்த இஸ்ரேல்

Published

on

காசாவின் வைத்தியசாலைக்குள் அதிரடியாக நுழைந்த இஸ்ரேல்

மத்திய காசாவில் உள்ள பிரதான வைத்தியசாலையான அல்-ஷிபா வைத்தியசாலையில் உள்நுழைந்து அதை முற்றுகையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல்-ஷிபா வைத்தியசாலையை ஹமாஸ் இயக்கம் கட்டுப்பாட்டு மையமாகப் பயன்படுத்துவதாக இஸ்ரேல் குற்றம் சாட்டி வந்தது.

இந்நிலையில் வைத்தியசாலையின் வளாகத்துக்குள் இஸ்ரேலின் பீரங்கிகள் நுழைந்துள்ளதாகவும் அவசர மற்றும் அறுவை சிகிச்சை பிரிவுகள் உட்பட வைத்தியசாலையின் எல்லா இடங்களிலும் இராணுவத்தினர் நுழைந்திருப்பதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.

இதேவேளை தற்போது முன்னெடுக்கப்படும் போர் ஹமாஸ் இயக்கத்துடன் தான் என்றும் பொதுமக்களோடு அல்ல என்பதையும் இஸ்ரேல் தெளிவுப்படுத்தியுள்ளது.

வைத்தியசாலைக்குள் சோதனையில் ஈடுபட்டு வரும் இஸ்ரேல் இராணுவம். அங்குள்ள மக்கள் மற்றும் நோயாளிகளிடமும் விசாரணை நடத்துவதாக தெரிவித்துள்ளது.

தற்போது வரை எந்தவித ஹமாஸ் கட்டுபாட்டுக்கான ஆதாரமும் பிணைக்கைதிகள் இருப்பதற்கான ஆதாரமும் கிடைக்கப் பெறவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Exit mobile version