உலகம்

இன்னும் நிறைய பேசவேண்டியிருக்கிறது… சர்ச்சையில் சிக்கி பதவியிழந்த உள்துறைச் செயலர்

Published

on

இன்னும் நிறைய பேசவேண்டியிருக்கிறது… சர்ச்சையில் சிக்கி பதவியிழந்த உள்துறைச் செயலர்

சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிக்கொண்டேயிருந்ததால் பதவியை இழந்த பிரித்தானிய உள்துறைச் செயலரான சுவெல்லா பிரேவர்மேன், இன்னும் நிறைய பேசவேண்டியிருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

புலம்பெயர் பின்னணி கொண்டவராக இருந்த நிலையிலும், இந்திய வம்சாவளியினரான சுவெல்லா, புலம்பெயர்தலுக்கெதிராக பேசிக்கொண்டே இருந்தார், வீடற்றவர்களை மோசமாக விமர்சித்தார், பாலஸ்தீன ஆதரவு பேரணிகளின்போது பொலிசார் பாரபட்சமாக நடந்துகொள்வதாக கட்டுரை எழுதினார். அவரது கருத்துக்கள் சர்ச்சையை உருவாக்கிக்கொண்டே இருந்தன.

எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி ஆளும் கட்சியிலும் அவருக்கு எதிர்ப்பு வலுக்கத் துவங்கியது. ஏன் இன்னும் அவரை பிரதமர் ரிஷி பதவிநீக்கம் செய்யவில்லை என கேள்விகள் எழுந்தன.

இந்நிலையில், நேற்று சுவெல்லாவை அதிரடியாக பதவிநீக்கம் செய்தார் பிரதமர் ரிஷி சுனக்.

பதவிநீக்கம் செய்யப்பட்ட சுவெல்லா, உள்துறைச்செயலராக பணி புரிந்தது என் வாழ்வில் மிகப்பெரிய பாக்கியம் என்று கூறியுள்ளார்.

அத்துடன் நிற்காமல், நான் இன்னும் நிறைய பேசவேண்டியுள்ளது. நேரம் வரும்போது பேசுவேன் என்றும் கூறியுள்ளார் சுவெல்லா.

அவர் என்ன பேசப்போகிறார் என்பதும், அவர் பேசினாலும், யார் அவர் பேசுவதை காதுகொடுத்துக் கேட்கப்போகிறார்கள் என்பதும் யாருக்கும் தெரியாது.

எப்படியும், எதிர்காலத்தில் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகலாம் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சுவெல்லா, பதவிநீக்கம் செய்யப்பட்டது மோசமான முடிவுதான் என்பதில் சந்தேகமில்லை.

Exit mobile version