உலகம்

8 இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை! நிராகரித்த கத்தார் நீதிமன்றம்

Published

on

8 இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை! நிராகரித்த கத்தார் நீதிமன்றம்

8 இந்தியர்களின் மரண தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டை கத்தார் நீதிமன்றம் நிராகரித்தது.

கத்தாரில் 8 முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து இந்திய அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை கத்தார் நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனால், இரு நாடுகளும் இந்த தகவலை இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

கத்தார் நிறுவனமான அல் தஹ்ரா நிறுவனத்தில் பணிபுரியும் இந்த 8 இந்தியர்கள், உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட போதிலும், அவர்கள் மீதான குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் கத்தார் அதிகாரிகளால் வெளியிடப்படவில்லை.

இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததற்காக அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக்க கூறப்படுகிறது. தற்போது மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டதையடுத்து, இந்திய அரசு மற்றொரு சுற்று மேல்முறையீட்டுக்கு செல்லும் என்றும் வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்திய அரசு தனது குடிமக்களைக் காப்பாற்ற தன்னால் இயன்றவரை முயற்சிப்பதாகக் கூறியுள்ளது.

ஆகஸ்ட் 2022-ல் கைது செய்யப்பட்டவர்களில் கேப்டன் நவ்தேஜ் சிங் கில், கேப்டன் பிரேந்திர குமார் வர்மா, கேப்டன் சவுரப் வசிஷ்ட், கமாண்டர் அமித் நாக்பால், கமாண்டர் பூர்ணேந்து திவாரி, கமாண்டர் சுகுணாகர் பகலா, கமாண்டர் சஞ்சீவ் குப்தா மற்றும் மாலுமி ராகேஷ் கோபகுமார் ஆகியோர் அடங்குவர். அவர்கள் தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் மற்றும் கன்சல்டன்சி சர்வீசஸ் மூலம் பணியமர்த்தப்பட்டனர், கத்தாரின் ஆயுதப் படைகளுக்கு பயிற்சி மற்றும் சேவைகளை வழங்குகிறார்கள்.

Exit mobile version