உலகம்

காஸாவில் களமிறங்கிய ரஷ்யா… 60 பேர் எகிப்துக்கு வெளியேற்றம்

Published

on

காஸாவில் களமிறங்கிய ரஷ்யா… 60 பேர் எகிப்துக்கு வெளியேற்றம்

காசா பகுதியில் இருந்து ரஷ்ய குடிமக்களை வெளியேற்றும் பணி தொடங்கியுள்ள நிலையில் 60 க்கும் மேற்பட்ட ரஷ்ய கடவுச்சீட்டு தாரர்கள் எகிப்திற்குள் நுழைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காஸாவில் இருந்து வெளிநாட்டு கடவுச்சீட்டு தாரர்களை வெளியேற்றும் பணி நவம்பர் 1ம் திகதியில் இருந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் பாதுகாப்பு அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு, குறிப்பிட்ட நாட்களில் மட்டும் எகிப்து எல்லை திறக்கப்பட்டு வருகிறது.

மேலும், அவசர சிகிச்சை தேவைப்படும் பாலஸ்தீன மக்களும் எகிப்துக்கு செல்ல எல்லையில் காத்திருக்கும் சூழல் உருவானது. இது அந்த நாட்டுக்கு சிக்கலை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, பலமுறை எல்லையை கட்டாயமாக மூடும் நிலைக்கு எகிப்து தள்ளப்பட்டது. இந்த நிலையில் ஞாயிறன்று எகிப்து எல்லை திறக்கப்படும் என்ற தகவல் வெளியானது.

தற்போது காஸாவில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ள ரஷ்யர்கள் எகிப்துக்கு கடந்துள்ளனர். மேலும், உளவியல் ஆலோசனை, உணவு மற்றும் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்துள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரஷ்ய குடிமக்கள் கெய்ரோவிற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் எனவும் அங்கிருந்து ரஷ்யா பயணப்பட தேவையான ஆவணங்களை உறுதி செய்ய அதிகாரிகள் உதவுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது 60 பேர் வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், மொத்தம் 1,000 பேர்கள் காஸாவில் இருந்து வெளியேற ஒப்புக்கொண்டுள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Exit mobile version